பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 45

வாழ்வின் மேலோட்டமான தன்மைகளை இன்பகரமாகவும் நகைச்சுவையோடும், பொழுதுபோக்கு உத்தேசத்துடனும் இத்திரிக்கும் போக்கு ஒன்று. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் வழி அாட்டலில் வளர்ந்த இந்தப் போக்கு விகட மனோபாவம் ஆகும். இதை நுனிப்புல் மேயும் மனப்பான்மை என்று கு.ப.ரா. கூறுகிறார். இன்னொரு போக்கு நடுநிலையானது. பெருவாழ்வின் மிதப்பைப் போற்றும் கலைமகள் மனப்பான்மை என்று கு.ப.ரா குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரண்டிலிருந்தும் மாறுபட்டது மணிக்கொடி மனோ பாவம். வாழ்க்கையின் சகலதன்மைகளையும் ஆழ்ந்து கவனித்து, உணர்ச்சியோடு அழுத்தமாகச் சித்திரிக்கும் முயற்சிகளை அது வரவேற்றது. சிந்தனைக்கு வேலை கொடுத்தது. மணிக்கொடி புரட்சி மனப்பான்மை கொண்டது. தீவிரப் போக்கு உடையது என்று கு.ப. ராஜகோபாலன் கூறுகிறார்.

மணிக்கொடி தமிழ்ச் சிறுகதைக்கு கனமும் ஆழமும் சேர்த்து, இலக்கியத்தரம் உண்டாக்கியது. அருமையான மொழிபெயர்ப்புகள் மூலம் உலகத்துச் சிறுகதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தியது. புதிய பரிசோதனைகளை ஆதரித்தது. தமிழ் வாசகர்களில் ஒரு பகுதியினரிடம் இலக்கியஉணர்வை ஏற்படுத்தி, ரசனையைப் பண்படுத்தி வளர்த்தது.

இப்படிப் பலவிதத்தில் மணிக்கொடி அழுத்தமான பாதிப்பை உண்டாக்கியது. பின்னர் எழுதத் தொடங்கிய இளை ஞர்கள் பலர் மணிக்கொடி எழுத்தாளர்களைத் தங்கள் முன்னோடி களாக மதித்தார்கள். அதேபோல, லட்சிய வேகத்தோடும் இலக்கிய மோகத்தோடும் பத்திரிகை தொடங்க முற்பட்டவர்கள் மணிக் கொடியை முன்மாதிரியாகக்கொண்டு செயல்பட்டார்கள்.

ஆனால், சிறுகதை இலக்கியத்துக்காக மட்டுமே ஒரு தனிப் பத்திரிகை என்ற நிலை போய்விட்டது. நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல்விழிப்பும், புதியபுதிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும், விசாலப்பார்வையில் உலகை, மக்களைக் கவனித்துத் தாங்கள் உணர்ந்தவற்றை எழுத்தில் பிரதி பலிக்க வேண்டும் என்கிற எழுத்தாளர் உந்துதலும், வாசகர்களது ரசனையின் பன்முகஈடுபாடும் எதிர்பார்ப்பும் இந்த மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் ஆகும். -

மணிக்கொடிக்குப்பிறகு, 1930களின் கடைசியில், க.நா. சுப்ர மண்யம் தொடங்கி, மணிக்கொடி எழுத்தாளர்களின் ஒத்துழைப் போடு, நடத்திய சூறாவளி இந்த நிலைமையை நன்கு பிரதி பலித்தது.

மணிக்கொடி மாதிரி ஆழ்ந்த இலக்கியவிஷயங்களை