பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வல்லிக்கண்ணன் மட்டுமே சூறாவளி கொண்டிருக்கவில்லை. வியாபார வெற்றியாக வளர்ந்து கொண்டிருந்த ஆனந்த விகடன் போல ஜனரஞ்சகமான முறையிலும் ஒரு இலக்கியப்பத்திரிகையை நடத்திப் பார்க்க லாமே என்ற எண்ணத்தோடு போட்டி மனப்பான்மை யோடும் பலப்பரிட்சை செய்த ஒரு சோதனை முயற்சியாக சூறாவளி வெளிவந்தது.

சூறாவளி வாரம்தோறும் வெளிவந்த இலக்கியப் பத்திரிகை. கதைகள், கவிதைகள் போக வேறு பல அம்சங்கள் அதில் இடம் பெற்றன. சூறாவளி எனும் தலைப்பில் பட்டணத்துச் செய்தி களும் தமிழ்நாட்டு சமாச்சாரங்களும் நகைச்சுவையோடும் பரிகாசத்தொனியோடும் அலசப்பட்டன. ஆயகலைகள் என்ற தலைப்பில் சங்கீதம், சினிமா விமர்சனம், அகல்விளக்கு என்று அரசியல் விவகாரவிளக்கம், ராஜீய விஷயமாகத் தலையங்கம் அங்கே என்று அயல்நாட்டுச் செய்திகள், பெரிய மனுஷாள் எனும் தலைப்பில் அக்காலத்தில் உலகப்பிரமுகர்களான ஸ்டாலின், ரூஸ்வெல்ட், ஹிட்லர், முசோலினி, சியாங்கே ஷேக் போன்றவர் களின் வரலாற்று அறிமுகம், ராமபாணம் என்று புத்தக மதிப்புரை, சிங்காரி என்று பெண்கள் பகுதி, அவ்வப்போது விஞ்ஞானக் கட்டுரை, பொருளாதாரக் கட்டுரைகளும் வந்தன.

மணிக்கொடி காலத்திலேயே சினிமா புறக்கணிக்கமுடியாத ஒரு சக்தியாக வே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தது. கடைசிக் கட்ட மணிக்கொடி இதழ்களில் சினிமாக் காட்சிப் படங்களும் விஷயங்களும் இடம் பெற்றன. சூறாவளியில் இவை விசேஷமான கவனிப்புடன் இணைக்கப்பட்டன.

மணிக்கொடிக்கு வளம் சேர்த்த பிஎஸ் ராமையா, புதுமைப் பித்தன், ந. சிதம்பரசுப்பிரமண்யன், கு.ப. ராஜகோபாலன், சூறா வளியில் எழுதினார்கள். பாரதிதாசன், சது.க. யோகியார் கவிதைகள் பிரசுரமாயின. மணிக்கொடியில் பி.எஸ். ராமையா வுக்குத் துணைபுரிந்த கிரா (கி. ராமச்சந்திரன்) தான் சூறாவளி யிலும் துணைஆசிரியராகப் பணிபுரிந்தார்.

‘சூறாவளி’ வசனகவிதைக்குத் தனிகவனிப்பு தந்தது. வசன கவிதை சம்பந்தமாகச் சுவையாக சர்ச்சை ஒன்றை வளர்த்தது.

சூறாவளி வந்த வேகத்திலேயே மறைந்தும் போயிற்று. அது 20 இதழ்கள்தான் பிரசுரம் பெற்றது. இலக்கியவாதிகள் மத்தி யிலோ, எழுத்துத்துறையிலோ சூறாவளி தீவிரமான தாக்கம் எதையும் ஏற்படுத்திவிட்டதாகச் சொல்வதற்கில்லை.

சூறாவளி வாரப்பத்திரிகையாக நடத்தப்படாமல், ஒரு மாசிகை ஆக அல்லது மாதம் இருமுறை இதழாக நடத்தப்பட்டி ருந்தால், அது உருப்படியாக ஏதேனும் செய்ய முடிந்தாலும் முடிந்திருக்கலாம்.