பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன் கட்டுரைகள் 47

சூறாவளி 1930களின் இறுதிக்கட்டத்தில் வெளிவந்தது. அதே காலகட்டத்தில், குறிப்பிடத்தகுந்த ஒரு இலக்கியப் பத்திரிகையாக பாரததேவி வாரஇதழ் பிரசுமாயிற்று என்பதையும் நினைவுகூர வேண்டும். விகடன் அளவில் வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு வரா. ஆசிரியராக இருந்தார். கு.ப. ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, பாரத தேவி வார இதழின் வளர்ச்சியில் பங்கு கொண்டிருந்தர்கள். சிறுகதைகளோடு, சிந்தனைக்கட்டுரைகள் மற்றும் பல சோதனைமுயற்சிகளும் அதில் அச்சாயின. வ.ரா. எழுதி வந்த ஆளுக்குள்ளே ஆளு எத்தனை ஆளு என்ற கட்டுரை வரிசை ரசனைக்குரிய சமூகச் சித்திரமாகவும் உளவியல் பிரதி பலிப்பாகவும் விளங்கியது.

மணிக்கொடி வாரப்பத்திரிகை போன்று, களிராட்டை என்றொரு பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது. சாமிநாத சாஸ்திரி என்ற தேசபக்தர் நடத்திய அந்தப் பத்திரிகையில் சிட்டி - பெ.கோ. சுந்தரராஜன் அதிகமாகவே எழுதினார். கதைகள் மட்டுமின்றி, சமூக சீர்திருத்தம், பண்பாட்டு உயர்வு சம்பந்தமான கட்டுரைகளும் களிராட்டையில் இடம் பெற்றன.

பாரதிதாசன் - கவி சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலம். தேசபக்தர் கா.சீ. வேங்கடரமணி - முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன் ஆகிய நாவல்களைப் படைத்த சிந்தனை யாளர் - பாரதமணி என்ற பத்திரிகையை நடத்தினார். கிராம முன்னேற்றமும் கைத்தொழில் அபிவிருத்தியுமே அதன் லட்சியக் கொள்கைகளாக இருந்தபோதிலும், இலக்கியத்துக்கும் அது கணிச மான பங்கை செலுத்தியுள்ளது. கா. சீ. வேங்கடரமணி கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை. விக்னேஸ்வரா என்ற பெயரில் ஆங்கிலத்தில் அரியகட்டுரைகள் எழுதிச் சிறப்புற்ற என். ரகுநாத அய்யர் (ஹிந்து உதவி ஆசியராகப் பணியாற்றிய அறிஞர் ரசிகன் என்ற புனை பெயரில் தனித்தன்மை கொண்ட கதைகளையும் நாடகங்களையும் பாரதமணியில் எழுதிவந்தார்.

சூறாவளி ஓய்ந்து ஒடுங்கிய பிறகு மறுமலர்ச்சி இலக்கியத் துக்கு என்று ஒரு தனிப்பத்திரிகை இல்லாதகுறை இலக்கியவாதி களால் உணரப்பட்டது. அந்த உந்துதலினால் விரா. ராஜகோபாலன், திருச்சியில், 1942ல் கலாமோகினி என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை ஆரம்பித்தார்.

எதையும் புதுமையாகச் சொல்வதோடு, எடுத்துச் சொல்ல வேண்டிய உண்மைகளை நேரடியாக மெய்த்துணிவோடு சொல்லியே தீரவேண்டும் என்ற உறுதியும் கொண்டிருந்தார் விராரா சாலி வாஹனன், விக்ரமாதித்தன் என்ற பெயர்களிலும் அவர் எழுதினார்.