பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வல்லிக்கண்ணன் கிராமஊழியனில் கொண்டு சேர்த்திருந்தது. ஒரு வருடம் வ.க. ஊழியன் துணைஆசிரியர் பொறுப்பிலும், பின்னர் திருலோக சீதாராம் ஆசிரியர் பதவியிலிருந்து விலகி திருச்சி சிவாஜி பத்திரி கையின் பொறுப்பை ஏற்கப்போய்விட்டதால் ஆசிரியர் ஆகவும் பணிபுரிவதற்காகக் காலம் துணைசெய்தது.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதி வாக்கை மூலவாக்கிய மாகக் கொண்டிருந்த கிராமஊழியன் எப்போதும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தது.

புதுமைப்பித்தன் வேளுர் வெ.கந்தசாமிப்பிள்ளை என அவதாரம் பூண்டு கவிதை எழுதத் தொடங்கியது. இந்தக் கால கட்டத்திலேதான். அவருடைய கவிதைகள் ஊழியனில் வெளியாயின. ந. பிச்சமூர்த்தி, யாப்பில்லாக்கவிதைகளோடு, மரபுக் கவிதைகளும் எழுதலானார். அவையும் கிராமஊழியனில் பிரசுரம் ஆயின.

கவிஞர் கலைவாணன், ஈழத்துக்கவிஞர்களான நாவற் குழியூர் நடராஜன், மகாகவி, சோ. தியாகராஜன், க. இ. சரவணமுத்து ஆகியோரின் கவிதைகளையும் ஊழியன் பிரசுரித்தது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இதழ்தோறும் வெளி யிட்டது. இலங்கையர்கோன் ஊழியனின் இறுதி இதழ்வரை நாடகங்களும் கதைகளும் எழுதிக் கொண்டிருந்தார்.

தி.க சிவசங்கரன் கவிதை, நாடகம், கட்டுரைகள், சூடும் சுவையும் நிறைந்த விமர்சனங்கள் எல்லாம் எழுதினார்.உலகத்துச் சிறுகதைகள் அசோகன் (ரா.சு.கோமதிநாயகம் மொழிபெயர்ப்பாக இடம் பெற்றன. இளைய எழுத்தாளர்கள் பலரது எழுத்துக்களை ஊழியன் வெளியிட்டது.

எம்.வி. வெங்கட்ராம் அருமையான சிறுகதைகள் எழுதிய தோடு, எம். விக்ரகவிநாசன் என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். சரத்சந்திரர் பெண்கள் பற்றி எழுதியிருந்த கட்டுரைத் தொடர் ஒன்றையும் எம்.வி.வி. மொழிபெயர்த்து வந்தார்.

வல்லிக்கண்ணன் பல அவதாரங்களில் வேகமும் விறு விறுப்பும் புதுமையும் நையாண்டியும், சூடும் சுவாரஸ்யமும், நிறைந்த எழுத்துக்கள் மூலம் கிராமஊழியனை இலக்கியவாதிகளின் கவனிப்புக்கும் பேச்சுக்கும், பாராட்டுதலுக்கும் கண்டனங் களுக்கும் இலக்காக்க முடிந்தது.

புத்தக மதிப்புரை, நாடோடிக் கதைகள், வசனகவிதைகள் இப்படிப் பலவற்றாலும் தனது இருப்பை உணர்த்திக் கொண்டி ருந்த கிராமஊழியன் லாபகரமாக நடைபெறவில்லை என்பதால், 1947 மே மாதம் அதன் நிர்வாகிகளால் நிறுத்தப்பட்டு விட்டது.