பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 54

பழைய பத்திரிகை புதிய பரிணாமம் பெற்று மறுமலர்ச்சி இலக்கியப்பத்திரிகையாக உருவெடுத்த வரலாற்றில் சந்திரோதயம் என்பதும் சேரும். க. நா. சுப்ரமண்யம், தொழில் அதிபர் ஒருவர் துணையோடு சந்திரோதயம் என்ற பழைய பத்திரிகைக்குப் புதிய வடிவமும் புதிய வேகமும் கொடுத்தார். சி.சு. செல்லப்பா துணை ஆசிரியர்.

இதன் போக்கும், இதில் வந்த சில பகுதிகளும் சூறாவளியை நினைவுபடுத்திய போதிலும், இந்த மாதம் இருமுறைப்பத்திரிகை அதிக இலக்கியத்தரம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தனின் கபாட புரம் இதில் தொடர்பிரசுரம் பெற்றது. ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்ரமண்யன், ரகுநாதன், தி. ஜானகிராமன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் முதலியவர்கள் அடிக்கடி கதைகள் எழுதினார்கள். லா.ச. ராமாமிர்தம் கதைகள் விசேஷமாகக்குறிப்பிடும்படி வந்தன. சி.சு. செல்லப்பாவின் கதைகளும் மொழிபெயர்ப்புகளும், க.நா.சுநாவல் களும் இப்பத்திரிகையின் இலக்கியத்தரத்துக்கு கனம் சேர்த்தன.

பொருளாதாரப் பலம் பெற்றிருந்த போதிலும், வியாபார வெற்றியாக வளராததனால் சந்திரோதயமும் நிறுத்தப்பட்டது.

1940களில் நம்பிக்கைக்குரல் கொடுத்தபடி தோன்றிய மற்று மொரு மறுமலர்ச்சி இலக்கியப்பத்திரிகை தேனி. கும்பகோணத்தில் 1948 மார்ச்சில் எம்.வி. வெங்கட்ராம் தேனி மாசிகையை ஆரம்பித்தார். கரிச்சான்குஞ்சு துணைஆசிரியர்.

தேனியின் rேத்திரம் விரிவானது விலங்கு இல்லாத சஞ்சாரி அது. யாராலும் அதற்கு விலங்கிடவும் இயலாது என்று கூறிக் கொண்டு தேனி தன் உலாவைத் தொடங்கியது. கதைகளையே அதிகம் பிரசுரித்தது. கநா. சுப்ரமண்யத்தின் ஜாதிமுத்து நாவலைத் தொடர்கதையாக வெளியிட்டது.

உரையாடல் வடிவத்தில் கலை, இலக்கியம், தத்துவம், சமூகம் பற்றிய கருத்துக்களை கநா.க எழுதினார். மெளனி, லா.ச.ராமா மிர்தம் கதைகள் தேனியில் வந்தன. கலாமோகினி கிராமஊழியன் எழுத்தாளர்கள் பலரும் தங்கள் ஆற்றலைக் காட்டிவந்தனர்.

தேனி, தரமான பத்திரிகையாக வளர்ந்தது. ஆயினும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாழமுடியவில்லை. அதனால், இதே காலகட்டத்தில் 1940களின் பிற்பகுதியில் தோன்றி லட்சியப் பணிபுரிந்த தரமான இலக்கியப் பத்திரிகைகளில் சிந்தனை'யும் ஒன்று ஆகும். அதன் ஆசிரியர் அ. சீனிவாச ராகவன்.

சிந்தனை இல்லாவிட்டால் ஞானமில்லை. முன்னேற்றம் இல்லை. நாகரிகம் இல்லை. மனிதனுடைய சாதனை எல்லாம் சிந்தனையின் ஆற்றலைக்கொண்டுதான். எங்கு சிந்தனை தெளி வடைந்து பரந்து ஓங்குகிறதோ அங்கே வாழ்க்கையின் வளம்