பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. வல்லிக்கண்ணன்

கினார். அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்க்ராஜ் ஆனந்த் முதலியவர்களின் சிறுகதைகள் சாந்தியில் பிரசுரமாயின. கட்ட பொம்மு, மருதுபாண்டியர்வரலாறு பற்றிய நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள எழுதினார். நா. வான மாமலை சாமி. சிதம்பரனார் கட்டுரைகளும் பிரசுரமாயின.

சாந்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் வ. விஜய பாஸ்கரன் சரஸ்வதியை ஆரம்பித்தார்.

தமிழ்ப் பத்திரிகைத் துறையில் காலஓட்டத்தில் ஏற்பட்டி ருந்த சில தாக்கங்கள் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும்.

கவி பாரதியை லட்சிய வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கும், தேசவிடுதலைக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்த பத்திரிகைத்துறையில், அதே நோக்கத்தோடு மணிக்கொடி வளர்ந்தது. தமிழ் இலக்கியத்தில் ஆழமும் கனமும் புதுமையும் வளமும் சேர்க்க மணிக்கொடி எழுத்தாளர்கள் முயன்றார்கள். அவர்களையும் மணிக்கொடியின் போக்கையும் அடியொற்றி வளர்ந்தன, பின்னர் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைகள்.

இந்த இயங்குதல் தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் இருந்தது. தமிழ்நாட்டில் எழுகிற அலைகள் இலங்கையிலும் அதே வரிசை அலைகளைத் தோற்றுவிப்பது சகஜமாக இருந்து வந்திருக்கிறது.

மணிக்கொடி நடந்துகொண்டிருந்த காலத்தில் அதன் வேகத்தை இலங்கையில் ஈழகேசரி பிரதிபலித்தது. அதன் ஆசிரிய ராகப் பணியாற்றிய சோ. சிவபாதசுந்தரம் இலங்கையில் தமிழ் இலக்கிய மலர்ச்சிக்கும் சிறுகதை வளர்ச்சிக்கும் பெருமளவு சேவை புரிந்துள்ளார்.

தமிழகத்தில் கிராமஊழியனும் கலாமோகினியும் தீவிரமாக இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், அவற்றினால் ஈர்க்கப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள் அங்கே மறுமலர்ச்சி என்ற பத்திரிகையைத் தொடங்கி வளர்த்தார்கள். பல கவிஞர் களும் இளைய எழுத்தாளர்களும் மறுமலர்ச்சியின் வளர்ச்சிக்கு உழைத்தார்கள்.

வீரசேகரி, தினகரன் நாளேடுகளும் வாரஇதழ்கள் வெளி யிட்டு இலக்கியப்பணி புரிந்தன. தினகரன் க. கைலாசபதி ஆசிரியப் பொறுப்பில் இலங்கையில் சிறுகதை எழுத்தாளர்களைப் பயிற்று வித்தது. சிறுகதையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் கணிசமான பங்கு ஆற்றியது.

தமிழ்நாட்டுப் பத்திரிகைத்துறையில் முற்போக்கு இலக்கிய