பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 57 இவ்வகையில் நடை, கசடதபற ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நடை என்ற காலாண்டு ஏடு இரண்டு வருடங்களே இயங்கியது. கசடதபற மாதப்பத்திரிகை. இவ்விரண்டும் சிறுகதை, புதுக்கவிதை, இலக்கிய விவாதங்களோடு ஓவியக்கலை, நாடகம், கலைத்தரமான திரைப்படம் ஆகியவற்றிலும் அக்கறை காட்டின. கவிஞர் ஞானக் கூத்தன் மற்றும் ந. முத்துசாமி, சி. மணி, வைதீஸ்வரன், தி சோ. வேணுகோபாலன், பசுவய்யா, தர்மூசிவராமு முதலிய கவிஞர் களை எழுத்து அறிமுகப்படுத்தியது. ந. பிச்சமூர்த்தியின் வழித் துணை காட்டு வாத்து காவியங்களையும், சி. மணியின் நரகம், வரும்போகும் ஆகிய நீண்ட கவிதைப்படைப்புகளையும் வெளி யிட்டு, புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தது. வெங்கட் சாமிநாதனும், தர்மூசிவராமுவும் குறிப்பிடத்தகுந்த கட்டுரையாசிரியர்களாகத் தெரியவருவதற்கு எழுத்து துணை செய்தது.

சரஸ்வதி காலத்தில் வெளிவந்த இதர இலக்கியப் பத்திரி கைகள் என்று பகீரதன் நடத்திய கங்கை, உமாபதி பிரசுரித்த உமா, பி. எம். கண்ணனை ஆசிரியராகக் கொண்டிருந்த கலாவல்லி ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும். விந்தன் நடத்திய மனிதன் பத்திரிகையையும் நினைவுகூரலாம். இவை எல்லாம் அவ்அவற்றின் ஆற்றலுக்கு ஏற்றபடி இலக்கியசேவை புரிந்துள்ளன. சா. கந்தசாமி போன்ற படைப்பாளிகள் தெரியவருவதற்குத் துணைபுரிந்தன.

கவிதை, சிறுகதை, குறுநாவல், நாடகம், நாவல் முதலிய பல்வேறு தன்மைப் படைப்புகளிலும் புதுமுயற்சிகளுக்கும் சோதனை ரீதியான எழுத்துக்களுக்கும், புதிய படைப்பாளிகளின் உற்சாகமான மற்றும் துணிச்சலான சிருஷ்டிகளுக்கும் இடம் தந்து கொண்டு 19 வருடங்களாக நடை போடுகிறது. கணையாழி மாதப் பத்திரிகை. தனிமனித அனுபவங்கள், தனிநபர் அக உளைச்சல்கள், எண்ணஒட்டங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கிய முயற்சிகளோடு, சமூகப்பார்வை கொண்ட முக்கியப் பிரச்சனை களை அலசி ஆராய்கிற எழுத்துக்களுக்கும் கணையாழி இடம் தருகிறது.

தனி இலக்கிய ஏடு ஆகக் கசடதபற வெளிவந்து கொண் டிருந்த காலத்தில், அதற்கு நேர்எதிரிடையான போக்குடன், சமுதாயப்பார்வையும் புரட்சி மனோபாவமும் கொண்டு வானம் பாடி என்ற விலையிலாக் கவிதைமடல் தோன்றியது. சமுதாய நோக்குடன் எழுதுகிற எண்ணற்ற எழுத்தாளர்களின் புதுக்கவிதை களுக்கு வானம்பாடி ஊக்கம் அளித்தது. அத்துடன் அது ஒரு வேக இயக்கம் போல, நாடு நெடுகிலும் - மாவட்டம் தோறும் - புதுக்கவிதைக்கான சிற்றேடுகள் தோன்றுவதற்கும் வழி காட்டியது. இதெல்லாம் சிறிது காலப்பரபரப்பாகவே எழுந்து அடங்கிவிட்டது என்கிற உண்மையையும் எடுத்துக் கூறவேண்டும்.