பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வல்லிக்கண்ணன்

கவிஞர் ஞானக்கூத்தனும் அவர் நண்பர்களும் நடத்திய ழ, கவனம் ஆகியவை புதுக்கவிதை சோதனைகளுக்கும் புதுமைக் கதைகளுக்கும் இடம் அளித்தன. இந்த ரீதியில் இப்போது அவர் களுடைய மையம் என்ற காலாண்டு ஏடு செயல்படுகிறது.

கலைமகள் - மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு ஆதரவு காட்டி வந்த மாத இதழ் - காலவேகத்தில் நாட்டு நிலைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் முழுமை யான இலக்கியப் பத்திரிகையாக இருந்த கலைமகள் வியாபார நோக்கில், தன்னை ஒரு குடும்பப்பத்திரிகை என்று அறிவித்து, தன்போக்கை மாற்றிக்கொண்டது.

எந்த இலத்தையும் பிரதிபலிக்காமல், ஒரு மிதவாதத் தன்மை யோடு தீபம் மாத இதழ் 19 வருடங்களாக நடந்து வருகிறது. எழுத்தாளர்கள் பேட்டி, பிறமொழி எழுத்தாளர்கள் அறிமுகம் என்று பலவகையான விஷயங்களையும் வெளியிட்டுள்ளது. மலையாள மொழி நாவல் மொழிபெயர்ப்பு, என்று பலவகை யான விஷயங்களையும் வெளியிட்டுள்ளது. ஞானரதம் கவனிப்புக்கு உரிய ஒரு பத்திரிகையாக வளர்ந்தது. முதலில் ஒரு வருடம் ஜெய காந்தன் அதன் ஆசிரியராக இருந்தார். பிறகு, பதிப்பாளரான தேவ. சித்திரபாரதி (அ.இப்ராகிம்) ஆசிரியப் பொறுப்பையும் நிர்வகித்தார். இலக்கியவிவகாரங்களில் ஞானரதம் அக்கறை காட்டியது.

சதங்கை, ஜெயந்தி அஃக், கொல்லிப் பாவை - இப்படிச் சிறுபத்திரிகைகள் பல இலக்கியப்பணி புரிந்துள்ளன.

பெரிய அளவில், வெற்றிகரமாக நடந்த ஒரு இலக்கியப் பத்திரிகை கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் நடத்திய இந்த இலக்கிய ஏடு எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. இளைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலருக்கு வளர்ச்சிக் களமாக உதவியது.

அமுதசுரபி, கலைமகள் வழியில் நடந்து, பிறகு தனக்கென்று ஒரு வழி அமைத்து, இலக்கியப் பணிபுரிகிறது. லா.ச. ராமாமிர் தத்தின் கதைகளை வெளியிட்டுச் சிறப்புற்ற இது அவரது வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் கட்டுரைத் தொடரையும் பிரசுரித் துள்ளது.

மணிக்கொடிகாலம், சரஸ்வதிகாலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் தமிழ்உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள் போன்ற இலக்கிய வரலாறுகள் முதலிய தரமான - பயனுள்ள விஷயங்களை, தீபம் பிரசுரித்துள்ளது. வண்ணதாசன், நாஞ்சில்நாடன் போன்ற இளையதலைமுறைப் படைப்பாளிகள் வளர்வதற்குத் துணைபுரிந்திருக்கிறது.