பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழில் சிறுகதை இலக்கியம் போலவே கட்டுரையும் பல வண்ணங்களோடும் வனப்போடும் வளமாகச் செழித்து வளர்ந் திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இலக்கியவடிவங்கள் அனைத்திலும் என் எழுத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுத்து முயற்சிகளில் முனைந்த நான் கதை, நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல வகைகளிலும் எழுதி வந்தேன். கட்டுரை களும் எழுதினேன். சிறுகதைகளைவிட கட்டுரைகள் அதிகம் எழுதி யுள்ளேன் என்று சொல்லலாம்.

ஒருகட்டத்தில், காலத்தின் கட்டாயத்தால், தொடர்ந்து கட்டுரை களையே நான் அதிகமாக எழுத நேர்ந்தது. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதிகாலம், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள் என்று வரலாற்று அடிப் படையில் கட்டுரைகள் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவை "தீபம்” இலக்கிய இதழில் தொடர்ந்து பிரசுரம் பெற்றன. அதனால் பிந்திய தலைமுறையினரால் நான் கட்டுரையாளனாகவே அறியப் படலானேன்.

ஒரே பொருள் குறித்து, தொடர்கட்டுரைகள் எழுதியது போலவே, பல்வேறு பொருள்கள் பற்றிய கட்டுரைகளை நான் வெகுகாலமாகவே எழுதி வந்திருக்கிறேன். பலவகையான கட்டுரைகளை எழுதியிருக் கிறேன். அவை தமிழ்நாட்டின் பலப்பல பத்திரிகைகளிலும், சிங்கப்பூர் "தமிழ் முரசு", இலங்கை "தினகரன்" ஆகிய பத்திரிகைகளிலும் அவ்வப்போது பிரசுரம் பெற்றுள்ளன.

நான் எழுதிய கட்டுரைத் தொடர்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றுவிட்டன. எனது தனித்தனிக் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இதுவரை நூலாக வெளிவரவில்லை. இதுதான் எனது முதலாவது கட்டுரைத்தொகுப்பு ஆகும்.

என்னிடம் நட்பு உணர்வும் மதிப்பும் கொண்டிருக்கும் ஈழத்து