பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால இலக்கியத்துக்கு சிற்றிதழ்களின் பங்களிப்பு

மொழிவளர்ச்சிக்கும். அம்மொழி

வளர் வதற்கும் வளம் பெறுவதற்கும் வகை செய்யும் இலக்கியங்களின், இலக்கியத்தின்

பல்வேறு வடிவங்களின் - வளர்ச்சிக்கும் பத்திரிகைகள் நல்ல முறையில் துணைபுரிகின்றன. -

தமிழ்மொழியின், தமிழ்இலக்கியத்தின், வளம் நிறைந்த வளர்ச்சிக்குப் பத்திரிகைகள் ஆற்றி வந்திருக்கின்ற, இப்பவும் ஆற்றி வருகிற - பங்கு கணிசமானது.

அதிகஅளவில் வாசகர்களைச் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் படுகிற, ஜனரஞ்சகப் பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்கிற வணிகநோக்குப் பத்திரிகை களும் தங்களால் இயன்ற அளவு இவ்வகையில் செயல்பட்டிருக்கின்றன என்பது ஒர் உண்மை ஆகும்.

அதே சமயம், அதிக அளவு வாசகர் களைப் பெற்றிராத போதிலும், இலட்சிய நோக்கோடும் கொள்கைப் பிடிப்புடனும், ஆற்றல் நிறைந்தோரின் ஒத்துழைப்புடனும் நடத்தப்பெற்றுள்ள சிற்றிதழ்கள் - சிறு பத்திரிகைகள் என்று பேசப்படுகிற லிட்டில் மேகஸின்ஸ் - தமிழ்மொழி புத்துயிர்ப்புடன் வளர்வதற்கும், தமிழ் இலக்கியம் தற்தாலப்