பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வல்லிக்கண்ணன்

ஆசிரியர் குழுவில் இருந்த கே. ராமநாதன், ஐ. மாயாண்டி பாரதி, சக்திதாசன், சுப்பிரமணியன் ஆகியோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்கள் சகல ருடனும் பழகிய கணேஷ் கே.ஏ. அப்பாஸ் முல்க்ராஜ் ஆனந்த், கிருஷன்சந்த் போன்ற வடஇந்திய எழுத்தாளர்களோடும் பழகினார். பெரும்பான்மையான வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அவர் அங்கே உள்ள எழுத்தாளர்கள், இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டவர். 1984ல் கூட பல்கேரியா போய் வந்தார். பல்கேரியக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ் தாவல்களையும் அவர் தமிழாக்கியிருக்கிறார். கலா நேசன் என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். இப்போதும் இலங்கைவாசியாகத்தான் இருக்கிறார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்று வதற்குக் காரணமாக இருந்தவர்களில் கே. கணேஷகும் ஒருவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக் கிறார்.

"1946இல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக்காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் களாகவிருந்த கே. ராமநாதன், கே. கணேஷ் ஆகியோரே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப்படுத்தலையும் அடிக் கல்லாகக்கொண்டு இந்தியாவில் கே. ஏ. அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷ~ம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர்”.

இதே கணேஷலிம் ராமநாதனும்தான் கூட்டாசிரியர் களாக இணைந்து பாரதி சஞ்சிகையை நடத்தினர்.

பாரதியின் முதலாவது இதழ் 1946 ஜனவரியில் வெளிவந்தது.

அந்த இதழின் தலையங்கத்தின் சிறுபகுதி இது: பாரதி அணுசக்தி யுகத்தின் சிற்பி. விஞ்ஞானமுடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல் தமிழர் மொழிக்கும் புதுமைப் போக்களித்த மகாகவிபாரதியின் பெயர் தாங்கி வருகிறது இவ்விதழ். அவர் தமிழுக்குப் புதுவழி காட்டியது போலவே பாரதியும் கண்டதும் காதல்கதைகள் மலிந்து விட்ட இன்றைய தமிழிலக்கியப் போக்கிற்குப் புதுவழி காட்டும். தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்திற்குள்ளேயே தமிழைச் சிறைப்படுத்திக்கொண்ட பண்டிதர்களின் இரும்புப் பிடியினின்று அதனை மீட்டு மக்கள்