பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வல்லிக்கண்ணன்

மனசையும், இலங்கைப் பத்திரிகைகளையும் வெகுவாகப் பாதித்துத் தீமைபுரியும் தமிழ்ப்பத்திரிகைக் குப்பைகளுக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது வசந்தம். இளைய எழுத்தாளர்களின் கதை கவிதை களுடன், லுசூன் போன்ற முற்போக்கு இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை மொழி பெயர்த்தும் பிரசுரித்தது.

புரட்சிகரசிந்தனையாளர்களின் எழுத்துக் களம் என்று கூறியவாறு புத்தளம் மன்னார் வீதியிலிருந்து பொன்மடல் வந்தது.

அக்னி என்ற சிற்றேடு மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக்களமாகச் செயல்பட்டது.

1971ல் கற்பகம் தோன்றியது. வண்மையுடையதொரு சொல் லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் என்ற பாரதி வாக்கை இலட்சியவரிகளாகத் தாங்கி கலை, இலக்கியம் அறிவியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கவனம் செலுத்திய கற்பகம் ஈழத்துமண் வாசனையையும் சாதாரண விவசாயத் தொழிலாள மக்களுடைய வாழ்க்கைமுறையையும் கருத்திற் கொண்டு ஆற்றல் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

"களனி நூறு சிந்தனை மலரட்டும் நாறும் கீழ்மைகள், தகரட்டும்" என்ற கொள்கை முழக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் 1973 பிற்பகுதியில் தோன்றியது.

தேசத்தின் முற்போக்கு இலக்கியம் மட்டுமல்ல முழு முற்போக்கு இயக்கமுமே பின்னடிக்கப்பட்ட நிலையில், ஒரு விவசாயப் பிரதேசமான கிளிநொச்சியை நிலைக்களமாகக் கொண்டு களனி தீவிரமாகச் செயல்பட முயன்றது. ஆயினும், 1975ன் முற் பகுதிவரை நான்கே நான்கு இதழ்களைத்தான் கொண்டுவர முடிந்தது இலக்கிய உற்சாகிகளினால்.

1976ல் மீண்டும் "ஊற்றுக்கண்களைத் திறக்க முற்பட்டது வைரம் பாய்ந்த தனது கொள்கைக் கால்களில் ஊன்றி நின்று. ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பு ஏற்றமுற வளமூட்டும்; நூறு பூக்கள் மலரட்டும்; நாறும் கீழ்மைகள் தகரட்டும். இது அன்றும் இன்றும் என்றும் களனியின் தாரக மந்திரம். அழகான ரோசாப்பூக்கள் களனியின் இலக்கல்ல. ஆனால் அவை அழகூட்டி அலங்களிப்பதற்கு களனி எதிரல்ல என்று அது அறிவித்தது.

கிட்ட நிற்கும் நண்பர்கள் மட்டுமல்ல. எட்டி நிற்கும் நண்பர்களையும் களனி அரவணைத்து முன்னேற்றும் காலை இளங் கதிர்போல நாளும் தோன்றுகிற புதுமைச்சிற்பிகளின் புலமைக்குக் களமாய் களனி அமைவாகும். முதிய தலைமுறையின் முத்தான