பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 75 அனுபவங்கள் பிற்கால சந்ததிக்குப் பின்பலமாய் அமைவதற்குக் களனி துணையாகும் என்றும் நம்பிக்கைக் குரல் கொடுத்தது.

சமுதாயப்பார்வையுடன் எழுதப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகளோடு கலை விமர்சனங்களையும் களனி வெளியிட்டது. நாடக விமர்சனத்துடன், மிருனாள்சென் எழுதிய கட்டுரை களையும் மொழிபெயர்த்து வெளியிட்டது.

தாயகம்

1974ல் யாழ்ப்பாணம் தேசிய கலை இலக்கியப்பேரவை வெளியீடாகத் தாயகம் வெளிவந்தது. என்.கே. ரகுநாதன், யோகன், சில்லையூர் செல்வராசன், அன்பு ஜவஹர்ஷா போன்றவர்களின் படைப்புக்களையும் க. கைலாசபதியின் கட்டுரைகளையும் தாங்கி வந்தது. தோட்டத் தொழிலாளரின் தொடர்ச்சியான சோக வரலாற்றை முக்கியப்படுத்தும் கட்டுரைகளும் கதைகளும் அதில் அதிகம் இடம் பெற்றன.

நவயுகம்

காரைத் தீவில் பிரசுரம் பெற்றது. மருதூர்க் கொத்தன் கதைகளும், திக்கு வெல்லைக் கமால், தில்லையடிச் செல்வன், மேமன்கவி போன்றோரின் கவிதைகளும் வெளிவந்தன.

1979இல் சமர் இலக்கிய வட்டக்குழுவினருக்காக, சமர் என்ற முற்போக்கு இலக்கியஏடு தோன்றியது. ஆசிரியர் டானியல் அன்ரனி.

கீற்று இலக்கிய வட்டம் என்ற அமைப்பு 1979இல் கீற்று என்ற காலாண்டு சஞ்சிகையை நடத்தியது. கல்முனை எனும் இடத்தி லிருந்து பிரசுரமான இது வழக்கமான கவிதை, கதை, மொழி பெயர்ப்புக் கதைகள், நாடக விமர்சனம் முதலியவற்றை வெளி யிட்டது. சினிமா சம்பந்தமான கட்டுரைகளும் பிரசுரம் பெற்றன. "உண்ணுவதற்கும் நல்ல உணவின்றி உழைப்பவனின் எண்ணத்தை நாளும் இலக்கியமாய்ப் பாய்ச்சுகின்ற மின்னலெனும் கீற்று வீச்சாகும் எம் எழுத்து" என்று பெருமையுடன் கூறிக் கொண்ட இக்காலாண்டு ஏட்டின் ஆசிரியப்பொறுப்பை ஆர்.என். லோகேந்திரலிங்கம், கல்லூரன், கலைக்கொழுந்தன் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். -

சர்ச்சைக்குரிய விஷயங்கள், விறுவிறுப்பான தகவல்கள், பரபரப்பு ஏற்படுத்தும் அபிப்பிராயங்கள் முதலியவற்றை வெளியிடு வதில் கீற்று ஆர்வம் காட்டியது. எனவே அது இலக்கிய அபி மானிகள், பொதுவான வாசகர்கள் முதலியோரது கவனத்தைக் கவர்ந்தது.