பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 77 சுவையோடு கூடிய சீர்திருத்தக் கருத்துக்களும், சமூகப் பார்வையும் படிப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் துரண்டும். இக்கேள்வி - பதில்கள் புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றன.

இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துட னேயே பல பத்திரிகைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.

குமரன், புதுசு, சமூகதீபம், களம், ஒளி, நதி - இப்படி அநேகம். இவற்றில் தாரகை என்பதும் ஒன்று.

வேள்வியொன்று காண வாரீர் என்று அது எழுத்தாளர் களை அழைத்தது.

இளம் எழுத்தாளர்களின் உள்ளக் குமுறல்கள் - எழுதத் துடிக்கும் இலக்கிய ஆர்வலர்களின் இதயத் துடிப்புகள் எமக்கும் கேட்கிறது. தாள்தாளாக எழுதி அனுப்பிவிட்டு அவை பிரசுரிக்கப் படாமையால் பாழ்பாழாகப்போன பல படைப்பாளிகளின் இதயங்களையும் பரிசோதித்துப் பார்த்து விட்டோம்.

இமயமலையில் ஏறுவது மிகமிகக் கஷ்டமான காரியம் ஆனால் ஒரு இலக்கியப்படைப்பாளியின் இலட்சியப் படைப்பைப் பத்திரிகையில் வெளிக்கொணர்வது அதைவிடக் கஷ்டம். இப்படிச் சொல்லிக் கொண்டு இலக்கிய உலகத்தையே கைவிட்டுச் சென்ற பல அன்பர்களோடும் நாம் பழகி விட்டோம்.

எனவேதான், பிரபலம் - புதுமுகம் என்ற பேதமின்றி, தரமாக எதுவரினும் ஏற்றுப்பிரசுரிக்கும் நிலைக்குத் தயாராயிருக் கின்றோம்.

இந்த இலக்கிய வேள்வியில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளி களையும், ஆர்வலர்களையும் இருகரங்கூப்பி வரவேற்கிறோம்.

இவ்விதம் அறிவித்துக்கொண்டு தாரகை ஆகஸ்ட் 1981இல் தோன்றியது. ஆசிரியர் சி. சங்கரம்பிள்ளை. ஆசிரியர்குழு கண். மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை. பிரசுரமான இடம் மட்டக்களப்பு. -

மரபுக் கவிதை, புதுக்கவிதை, கதைகள், நகைச்சுவைச் சித்திரம், சமூக சீர்திருத்த நோக்குடைய கட்டுரைகளைத் தாரகை பிரசுரித்தது.

முற்போக்கு இலக்கியஉணர்வுடன், மல்லிகை போல் தரமான இலக்கியஏடு ஆகக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் வசந்தம் 1981இல் ஆரம்பிக்கப்பட்டது. வசந்தம் இலக்கிய வட்டத் தினருக்காக நடத்தப்பெற்ற இந்த சஞ்சிகை யோகநாதன் கவனிப்பில் வளர்ந்தது. கைலாசபதி, சிவத்தம்பி கட்டுரைகள்,