பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 79 எஸ். நோபெட், எம். தியாகராம், எல். ஜோதிகுமார் ஆகியோரை ஆசிரியர்குழு ஆகவும் கொண்டு இயங்கியது.

சிந்தனை பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இலக்கியம் படைக்கும் நவீனகம்பர்கள் ஒரு புறமும், எமக்கு இளங்காலையின் கதகதப்புத் தேவையில்லை. நெருப்பைத் தாருங்கள் என்று யதார்த்தத்தை மறந்த நக்கீரர்கள் ஒருபுறமும் நின்று வரிந்து கட்டிக்கொண்டு மகத்தான கூப்பாடு போடுகையில், இவற்றின் இடையே அல்லலுறும் இளம் எழுத்தாளர்களைப் பார்த்தும், வந்து குவியும் மூன்றாந்தர சஞ்சிகைகளில் புதையுண்டு கிடக்கும் பலதரமான வாசகர் கூட்டத்தைப் பார்த்துமே நாம் எம்மை இந்தப் புதிய அக்கினிப் பரீட்சையில் இறக்கிக் கொள்ள நேரிட்டது. இவ்வாறு கூறிக்கொண்டு தீர்த்தக்கரை தோன்றியது. மலை யகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த அறிவுஜீவிகளின் கூட்டுறவு முயற்சிதான் இக்காலாண்டு ஏடு. மலையக மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய சூழ்நிலை, பிரச் சினைகள், மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் கருத்து செலுத்தியது. மலையகமத்தியில் எழுதாத இலக்கியமாய் வாழ்ந்து வளர்ந்த நாட்டுப்பாடல்களைச் சேகரித்து ஏட்டில் எழுதாத இதயத்து ராகங்கள் என்று இதழ்தோறும் நிறையவே அச்சிட்டு வந்தது குறிப்பிடத்தகுந்த முக்கியமான பணி ஆகும்.

மலையகமக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சியையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவை.

"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்த கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தமிழின் பெயரால் எழுகின்ற சந்தடிகளுக்கும், கலையின் பெயரால் நடக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் பாரதியின் எளிமையான இந்தக் கூற்று இன்னும் அதன் மகத்துவத்தைத் தாங்கி நிற்கின்றது. இந்தக் கூற்றினைய்ே எமது தெய்வவாக்காகக் கொள்வதில் பெருமைப்படுகின்றோம்.

ஆனால் இப்படிக் கூறுவதின் நோக்கம் தமிழுக்கு உயிர் கொடுக்க வந்தோம் என்று சாதிக்கும் மமதை அல்ல. நாம் ஆற்றும் பணி மிகமிகச் சொற்பமானது என்பதைப் பிரக்ஞை பூர்வ மாகவே தீர்த்தக்கரை உணர்ந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடனேயே எழுந்து நின்று "எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது. என்னை நானே கவனித்துக்கொள்ள