பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} வல்லிக்கண்ணன்

எனக்குத்தெரியும்" என்று கூறி முகம் கழுவிச்சென்றால் யாருக்கும் சம்மதம்தான். இல்லை என்றாலும் யார்தான் கோபிக்கப் போவது: குழந்தைகளாயிற்றே.

தீர்த்தக்கரையும் இந்தப்பருவத்தில் நின்றுதான் உங்கள் அரவணைப்புக்காகக் கரங்களை நீட்டுகின்றது. ஆனாலும் இந்தக் குழந்தையின் யாத்திரையில் முகம்கொண்டு அரவணைக்க முயலும் மழலைகளும் தான் எத்தனை. சமூகத்தில், பல்வேறுபட்ட துறை களில் வாசகர்களாக விமர்சகர்களாக படைப்பாளிகளாகச் சங்கோஜத்தோடும் சிலசமயங்களில் துணிவோடும் நிற்கிற இந்தப் புதிய கர்த்தாக்களுக்குத் தீர்த்தக்கரையின் தாய்மை ஆதர்சமாக விளையும்,

இவ்விதம் அதன் மூன்றாவது இதழ் தலையங்கம் பேசியது. தீர்த்தக்கரை சமூகப்பிரச்சினைகளிலும் அக்கறை காட்டியது. ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தமிழாக்கி அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தது. கேள்வி பதில் பகுதியும் உண்டு.

குருஷேத்திரம் என்ற பகுதி ஒவ்வொரு இதழிலும் வந்தது. இலக்கிய விமர்சனங்கள், எழுத்தாளர் பிரச்சினைகள் முதலியன இதில் இடம் பெற்றன. பல பேர் தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படையாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

தீர்த்தக்கரை ஆசிரியர் சாந்திகுமார் மலையகம் பற்றி ஆய்வு ரீதியான கட்டுரைகள் எழுதியுள்ளார். தீர்த்தக்கரை பாராட்டப்பட வேண்டிய நல்லமுயற்சி. ஐந்து இதழ்களோடு அது நின்று போனது ஒரு இழப்புதான்.