பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணன்

இப்போதும் அது நிகழ்ந்தது. ஆனால், இம்முறை வல்லிக் கண்ணனை எப்படியும் இலங்கைக்கு வரவழைத்து விடுவது என்று சோமகாந்தன் உறுதியாக இருந்தார். என்னை அங்கு அனுப்பி விட்டுத்தான் இதர காரியங்களைக் கவனிப்பது என்று யோகநாதன் உறுதி பூண்டிருந்தார்.

பாஸ்போர்ட் எடுக்கவேண்டும். அது தொல்லை பிடித்த விவகாரம் என்று நான் தட்டிக்கழிக்க முயன்றேன். பாஸ்போர்ட் எடுக்க நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நண்பர் யோகநாதன் வாக்களித்தார்.

அது வெகுசிரமமான காரியமாகத்தான் இருந்தது. யோகநாதன் தனது சகல வேலைகளையும் ஒதுக்கிவிட்டு எனக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்காக, தனது காலம், உழைப்பு, பணம் அனைத்தையும் ஈடுபடுத்திப் பல நாட்கள் கடுமையாகப் பாடு பட்டார். அப்படி முயன்றும்கூட பாஸ்போர்ட் தாமதமாகத்தான் வாங்க முடிந்தது. அதனால் துவக்கவிழாவுக்கு நானும் பென்னிலனும் போக இயலவில்லை.

தாமரை ஆசிரியர் மகேந்திரன் மட்டும் 1996 ஜூலை 5ல் பயணம் செய்து இலக்கியப் பேரரங்கின் துவக்க விழாவுக்குப் போய்ச் சேர்ந்தார். பொன்னிலனும் நானும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளுக்குத்தான் போகமுடிந்தது. சென்னையிலிருந்து கொழும்புவுக்கு விமானப்பயணம் ஒருமணி நேரம்தான். இனிமை யாக இருந்தது.

மு. எ. சங்கத்தின் இலக்கியப்பேரரங்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தது. 5ம் தேதி துவக்க விழா. புதுமை இலக்கிய மலர் வெளியீடு 6 - 7 தேதிகளில் சிறுகதை, நாவல், கவிதை பற்றிய கருத்தரங்குகள். தினம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை, ஆய்வுக்கட்டுரைகள் படித்தல், கருத்துரை வழங்கல், சிறப்புச் சொற்பொழிவு, கேள்வி - பதில் என்று தொடர்ந்து நிகழ்ந்தன. பேராசிரியர் கா. சிவத்தம்பி கலாநிதி களான சித்தரலேகாமெளனகுரு, எம்.ஏ. நுஃமான், மற்றும் பத்மா சோமகாந்தன், சோமகாந்தன், கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், மேமன்கவி. வில்வரத்தினம் முதலியவர்களும் மற்றும் பெயர் பெற்ற எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் பங்குபெற்றனர். பெரிய அரங்கு அரங்கு நிறைந்த ரசிகர்கூட்டம். இலங்கைத் தமிழரின் இலக்கிய ஈடுபாட்டை இந்நிகழ்ச்சிகள் உணர்த்தின.

மூன்றாம்நாள் மாலை நிகழ்வில், இலங்கையின் மூத்த எழுத்தாளர் வரதர் பாராட்டப்பட்டார். 1944 முதல் சிறுகதை,