பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 83

கவிதைகள் எழுதிய வரதரை அந்நாளிலிருந்தே நான் அறிவேன். எழுத்துமூலம் தான். நான் பணிபுரிந்த கிராமஊழியன் இலக்கிய இதழில் அவருடைய எழுத்துக்கள் பிரசுரம் பெற்றன. இலங்கையில் 1940களில் இலக்கிய மறுமலர்ச்சி தோன்றவும் இயக்கமாக வளரவும் முன்னின்று பாடுபட்டவர்களில் வரதரும் ஒருவர். அவர் புத்தக வெளியீட்டாளரும்கூட அச்சக உரிமையாளர். துறு புத்தகங் களுக்கு அதிகமான நல்ல நூல்களை அவர் பிரசுரித்துள்ளார். கல்வி வளர்ச்சிக்கு நற்பணி புரிந்தவர். சமூக சீர்திருந்த நோக்குடன் செயல்பட்ட மனிதநேயர். அவரை நான் பாராட்டி வாழ்த்தினேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் பிரேம்ஜி, கே.எஸ். சிவகுமாரன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். வரதர் கதைகள் மலரும் நினைவுகள் எனும் இரண்டு நூல்கள் விழாவில் வெளியிடப்பட்டன.

இறுதியில் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி பொன்னிலன், சாரல்நாடன், மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கொழும்புவில் நாளேடுகளான தினகரன், வீரகேசரி ஆகிய இரண்டு பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் பிரேம்ஜி எங்களை அழைத்துச் சென்றார். ஆசிரியர்கள் அறிமுகம். ஆசிரியர் குழுவினர் மற்றும் உதவியாளர்களோடு கலந்துரையாடல் நிகழ்ந்தன. எங்கள் இலங்கை வருகை குறித்தும், அங்கு சேர்ந்தபிறகு எங்கள் நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் பற்றியும் அனைத்து தினசரிகளும் விரிவாக முக்கியமான இடத்தில் செய்திகள் விவரங்கள் பிரசுரித்தன. இலங்கை தினசரிகள் எழுத்தாளர்களை வெகுவாக மதித்து கவுரவிக்கின்றன. வானொலியும் தொலைக்காட்சியும் எங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எங்கள் நிகழ்வுகளை எடுப்பாக அறிவித்தன. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் எங்கள் பேட்டிகளும் கருத்துரைகளும் ஒலி - ஒளி பரப்பு செய்யப்பட்டன. இப்படித் தினம் பல்வேறு பணிகள் திமித்தம் காரில் போய் வருகையில் கொழும்பு நகரின் பல பகுதிகளையும் பார்த்து அதன் வளத்தையும் வனப்பையும் அறியமுடிந்தது. அங்கு மக்கள்தொகை அதிகமில்லை. அதனால் ரோடுகளில் நெரிசலும் பரபரப்பும் இல்லை.

அமைச்சின் கலை கலாசார சமய அலுவல் திணைக்களம் எங்களுக்காக வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தது. சிறுகதை, நாவல், சிற்றிதழ்கள், இலக்கியப்போக்குகள் என்று பல விஷயங்கள் பற்றியும் நாங்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்தினோம். ஒவ்வொரு நிகழ்விலும் கேள்விகள் கேட்கப்பட்டன.