பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வல்லிக்கண்ணன்

இலங்கையில் இளைஞர்களிடையே நல்ல இலக்கிய உணர்வும் இலக்கியஅறிவும், விஷயங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் இருப்பதை இவை புலப்படுத்தின.

கொழும்புவிலிருந்து சில நூறு மைல்கள் தள்ளி இருக்கிற கண்டிக்கு எங்களை அழைத்துச்சென்றார்கள். அங்கு சத்தியோதயா என்றொரு அமைப்பு. அது குன்றின் குரல் என்ற இதழையும் வெளியிடுகிறது. வேறு சமூக இலக்கியப் பணிகளிலும் ஆர்வம் காட்டுகிறது. அங்கு இரண்டுநாள் இலக்கியப் பயிலரங்கம் நடந்தது. அங்கும் காலை, மாலை அமர்வுகளில் இலக்கியப்பிரச்சனைகள் குறித்து நாங்கள் விளக்கஉரைகள் வழங்கினோம். சிறுகதை, நாவல், கவிதை பற்றிப் பயிலரங்குகளில் கலந்து கொண்டவர்கள் நிறையவே அறிய வாய்ப்பு கிட்டியது.

கண்டி, மலையகப்பகுதியைச் சேர்ந்த அழகான நகரம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நகரின் வனப்பையும் பசுமை யையும் குளுமையையும் நன்கு காணமுடிந்தது. இரவு வேளையில் வகைவகையான விளக்குகள். விண்மண்டலமென ஒளிர்ந்த மலைப் பகுதியின் மோகனத்தோற்றம் அற்புதமான காட்சி விருந்து.

கண்டியிலிருந்து சில நூறு மைல்கள் தள்ளி உள்ள மாத்தளை மகளிர் பள்ளியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. மண்டபம் நிறைந்து காணப்பட்ட வெண்சீருடை அணிந்த மாணவியர் வெள்ளை ரோஜாக்கள் போல் விளங்கினர். அவர்கள் முன் சிற்றிதழ்கள் பற்றி நான் பேசினேன். பொன்னிலன், நாவல்கள் குறித்து ரசமான உரை நிதழ்த்தினார். மாணவியர் கூடி இலக்கிய ஆர்வத்துடன் நல்ல கேள்விகள் கேட்டார்கள். உரிய பதில்களை மகிழ்வோடு வழங்கினேன்.

மலையகப்பகுதியைச் சேர்ந்த ஹட்டன் கண்டியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. அதிகாலையில் எழுந்து கண்டியிலிருந்து காரில் அங்கு போனோம். அழகான சூழ்நிலை, தேயிலைத் தோட்டங்கள் மிகுந்த பகுதி மலைக்குப் பின் மலையென அடுக்கடுக்கான உயர்ந்த பிரதேசம். அங்கிருந்து நந்தலாலா இலக்கிய வட்டம் ஹட்டனில் சிறப்புக் கூட்டத்துக்கு எங்களை அழைத்திருந்தது. அதில் இன்றைய இலக்கிய இசங்களும் முற்போக்கு இலக்கியமும் பற்றி நான் விரிவாகப் பேசினேன். தமிழ்நாவல்கள் குறித்து பொன்னிலன் சுவையாக சொற்பொழி வாற்றினார். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் வகையில் பலர் பயனுள்ள கேள்விகள் கேட்டார்கள். அவற்றின் மூலம் அவ்விளைஞர் களின் இலக்கிய ஈடுபாடும் படிப்பறிவும் தெரியவந்தன.

ஹட்டன் நிகழ்ச்சி முடிந்த உடனேயே காரில் பயணம் செய்து கண்டி வந்தோம். அங்கு மாலையில் ஒரு விசேஷவிழா.