பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 85

இலங்கையில் மலையகம் தனிப்பட்ட பகுதி. அங்கு தோட்டத்தொழிலாளர்களாக வாழும் தமிழர்கள் அதிகம். அவர்கள் வாழ்க்கை, வறுமையும் சோகமும் நிறைந்தது. அரசின் கொள்கை களால் அவர்களில் பெரும்பாலோர் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்தது. இவைபற்றிப் பல நாவல்கள், சிறுகதைகள், கவிதை களை மலையக எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பவும் எழுதுகிறார்கள்.

மலையகக் கலை இலக்கியங்கள் மக்கள் பிரச்சனைகள் முதலியவற்றை வெளித் தெரியச் செய்யும் முயற்சியில் அந்தனி ஜீவா தீவிரமாக உழைத்து வருகிறார். இவர் கொழுந்து என்ற இதழையும் நடத்துகிறார். புத்தகங்கள் வெளியிடுகிறார். அவருடைய உழைப்பினாலும் உற்சாகத்தாலும் மலையகக் கலை இலக்கியப் பேரவை பதினைந்து ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறது.

அதன் 15ஆவது ஆண்டுவிழா கண்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு நானும் பொன்னிலனும் உரைநிகழ்த்தினோம். கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலையக, கல்வி கலை இலக்கியத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 15 பேருக்கு விருது வழங்கும் வைபவமும் நடந்தது. மலையக நாவலாசிரியர் ஞானசேகரனின் கவ்வாத்து’ என்ற நாவலும் வெளியிடப்பட்டது.

அன்று இரவே கொழும்பு வந்து சேர்ந்தோம். ஒருநாள் திருகோணமலையில் பிரதேசத் தமிழ் இலக்கிய விழா நடந்தது. கொழும்புவிலிருந்து திருகோணமலைக்கு 600 மைல் துாரம் என்று சொல்லப்பட்டது. அவ்விழாவிலும் நாங்கள் பங்கு பற்றினோம்.

இவ்விழாவில் அபிநயப்பாடல், வாள் நடனம், கும்மி வில்லுப்பாட்டு முதலிய கலை நிகழ்ச்சிகள் எடுப்பாக விளங்கின. இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வ.அ. இராச ரத்தினம் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

மறுநாள் ஒவ்வொரு பள்ளிக்கு ஒருவராக வெவ்வேறு பள்ளிகளில் நாங்கள் மூவரும் மாணவமாணவியருக்கு உரை நிகழ்த்தினோம். பின்னர் புறப்பட்டு, கொழும்பு சேர்ந்தோம். அன்று மாலையில் ஒரு அமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். இதற்கு முன்னர் இரண்டு அமைச்சர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியிருந்தது.

இவ்விதம் ரொம்ப பிசியாகப் பதினோரு நாட்கள் கழிந்தன. இலங்கையில் ஒய்வே இல்லாதபடி நிகழ்ச்சிகள் நெருக்கடியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பன்னிரெண்டாம் நாள் புறப்பட்டு