பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வல்லிக்கண்ணன்

விமானம் மூலம் நாங்கள் மூவரும் சென்னை வந்து சேர்ந்தோம். இலங்கைத்தமிழர்களின் வாழ்க்கை, துயரங்கள் நிறைந்தது. யாழ்ப்பானத்தமிழ் மக்கள் புத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடிழந்து காடுகளிலும் வீதிஒரங்களிலும் வசிக்க நேரிட்டுள்ளது. அவர்கள் இயல்பான வாழ்வை இழந்து பல வருடங்களாக இன்னல்கள் அனுபவிக்கிறார்கள். கொழும்பு, திருகோணமலை, போன்ற பகுதி களிலும் இராணுவக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் மும்முர மாகவே செயல்படுகின்றன. இருந்தபோதிலும், தமிழரின் இலக்கிய தாகமும் கலை உணர்வும் ஒடுங்கிவிடாது. உயிர்ப்புடன் செயல் மலர்ச்சி பெற்றுத் திகழ்வதை அங்கு நடை பெற்ற விழாக்கள் எடுத்துக்காட்டின.

நான் இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சிகிரியா, அனுராதபுரம், பொலநறுவை, மிகிந்தலை, கதிர்காமம் போன்ற விசேஷச் சிறப்பு மிகுந்த இடங்களை, யாழ்ப்பாணத்தையும் பார்க்கவில்லைதான். எனினும் இலங்கை நண்பர்களின் அன்பை, நட்பு உணர்வை, மதித்துக் கவுரவிக்கும் உயர்பண்பை, இலங்கைத் தமிழரின் இலக்கிய ஈடுபாட்டை, ரசனையை, நன்கு கண்டேன். வல்லிக்கண்ணன் என்கிற எழுத்தாளன் பேரில் இலங்கை இலக்கியவாதிகள் கொண்டுள்ள மதிப்பையும் அபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் கண்டு ணர்ந்தேன். இது என் உள்ளத்தில் ஒரு நிறைவையும் புதிய தெம்பையும் சேர்த்துள்ளது.

&