பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியக்கும் மனம் வேண்டும்

நாகரிகப் பெருநகரத்தின் வீதிகள் எல்லாம் வெளிச்சமயம். எண்ணற்ற மின் விளக்குகள் இருளைத் துரத்திவிட்டுப் பேரொளி பரப்பிக் கொண்டிருந்தன. கடைகள், கட்டி டங்கள் எங்கெங்கும் ஒளிமழை பொழியும் விதவிதமான விளக்குகள். இரவு என்று தெரியாதபடி எங்கும் வெளிச்சமயம். வீடுகள் தோறும் ஒளி சிரிக்கும் விளக்குகள். நகரத்தின் பல பகுதிகளும் தனி அழகுடன் ஒளிர்ந்தன.

திடீரென்று மின்சக்தி செயலற்றுப் போச்சு.

இருட்டு கவிழ்ந்தது எங்கும். வீதிகளில் சந்து பொந்துகளில் வீடுகளில் எங்கெங்கும் இருட்டு. இருட்டைப் போக்குவதற்தான தற்காலிக ஏற்பாடுகளில் முனைந்தனர் மனிதர்கள். இப்போது இருள் சிரிக்கத் தொடங்கியது.

ஒரு வீட்டில், பொங்கிப் பெருகி வழிந்த பெரும் வெளிச்சத்தில் தனிஅறையில் அமைதி யாகப் படித்துக் கொண்டிருந்த ஒருவன் வெளிப் புறம் வந்து நின்றான். ஆகா என வியந்தது அவன் மனம் கண்கள், பார்வையைச் சுற்றிலும் மிதக்கவிட்டன. நிலாஒளி அற்புதமாகப் படிந்து கிடப்பதை வியப்புடன் விழுங்கினான் அவன்.