பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன் கட்டுரைகள் 89

அஸ்தமனத்தையும் பார்க்கக்கூடிய வாய்ப்புகளோ, பார்க்க வேண்டும் எனும் ஆசையோ நகரவாசிகளுக்கு இல்லை.

செம்பட்டுச் சல்லடம் சொகுசாக உடுத்தி எழிலாகக் கிழக்கில் சிரித்து வரும் உஷை பற்றிய கவிஞனின் வர்ணனை, இன்றைய நாகரிக மனிதர்களுக்கு பேத்தல் (பிதற்றல்) ஆகவே தோன்றும். அந்தி வானில் உமை கவிதை செய்து கொண்டிருக் கிறாள் என்ற கவிக்கூற்றும் புரியாத விஷயமாகவே படும் அவர் களுக்கு வைகறைவேளையின் ஒளி மலர்ச்சிகளையும் அந்தி வேளையின் வர்ணமய வானத்து விந்தைகளையும் கண்டு வியக்க எத்தனை பேர் தயாராக இருக்ககிறார்கள்?

தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து அநாகரிகக் கூத்துகளையும் அபத்த ஆட்டங்களையும் பார்ப்பதிலேயே பெரிய வர்களும் சிறியவர்களும் கருத்தாக இருக்கிறார்கள். காலம் மாறி விட்டது. மனிதர்களின் விருப்பங்களும் போக்குகளும் மாறிப் போயின. இயற்கையை, அதன் வனப்புகளையும் வசீகரங்களையும் காணவேண்டும் என்கிற எண்ணம் மனிதருக்கு வேண்டும். செயற்கைச் சாதனங்கள் பயனுள்ளவை. வலியன. சந்தேகமில்லை. அவற்றைப் போலவே - பல சமயங்களில், அவற்றை விடவும் - வலுவானவை. வனப்பு மிக்கவை. இனிமையானவை இயற்கை சக்திகள். அவற்றைக் கண்டு வியந்து, ரசித்துப் பழகி, பயன்படுத்தி மகிழக்கூடிய மனசை நாம் மீண்டும் பெறவேண்டும்.