பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்பின் மகா சக்தி

கடல் - பரந்து விரிந்து கிடக்கும் பயனற்ற நீர்க்காடு; இயற்கையின் ஊதாரித்தனத்தின் மற்றுமோர் எடுத்துக்காட்டு! இப்படி என் நண்பர் ஒருவர் சொன்னார்.

பயனற்றது என்று ஒரே அடியாகச் சொல்லிவிடுவது சரியாகாதுதான். கடலினால் எவ்வளவோ பயன்கள் உலகத்துக்கு, மனித இனத்துக்கு, இதர ஜீவராசிகளுக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

கடல், வலிமையின் சின்னம். மர்மங் களின் உறைவிடம் அமைதியின் ஆலயமான அதுவே குமுறலின் கொந்தளிப்பின் பயங்கரங் களின் நிலைக்களனாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு அலையும் ஒரு அற்புதம். அதிசய உருவகம். வியப்பின் சிலிர்ப்பு. அழகின் குமிழ்ப்பு, சீற்றத்தின் சிரிப்பு. அழிவின் சிதறல். சிதறல்களின் நுரைக் கோலம்.

கடல் உயிர்ப்பின் மகாசக்தி, உயிர்களின் ஊக்குவிப்பு.

பகல் நேரம், வெயில் நிறுத்தி வைத்த மாதிரிக் காய்கிறது. மணல்பரப்பு வெளேரென விரிந்து கிடக்கிறது. கரையோர மரங்கள். செடி கொடிகளின் இலைகள். பச்சையின் பல