பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 94

ரகங்கள் காட்டி அமைதியாய் உறங்குகின்றன. அவற்றின் மலர் களின் வெண்மையும் சிவப்பும் இதர நிறங்களும் வெயிலில் பளிடுகின்றன. கடல் நீலமாய்த் தென்படுகிறது. வானம் வேறுவித நீலமாய்த் தொங்குகிறது. தூரத்தில் ஒரு கப்பல், நீரில் செல்லும் வேகம் புலனாகத் தொலைவில் அமைதியாக ஒரேஇடத்தில் நிற்பது போன்ற தோற்றம் காட்டுகிறது. மனோகரமான அமைதியின் வர்ணச்சித்திரமாகக் காட்சி தருகிறது. அவ்வேளைய அனைத்தின் முழுத் தோற்றமும்.

கடல் ஒரம். நல்ல வெயில் நேரம், எல்லாம் பளீரெனத் தென்படும் சூழ்நிலை. மரங்களின் நிழல் பகுதி இனிய சுகநிலையம். அவ்வேளையிலும் மேலே எரிக்கும் வெயிலையும் பாதங்களைச் சுடும் மணலையும் பொருட்படுத்தாது உழைப்பே கண்ணாகி நிற்கிறார்கள் கருநிற மீனவர்கள். மரங்களின் கீழே அங்கங்கே உணர்ச்சித் துடிப்பு மிகுந்த யுவதிகளும் யுவன்களும் காதல் நாடகத்தின் சுவாரசியமான கட்டங்களை லயிப்போடு நடித்து இன்புற்ற வண்ணம் இருக்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாத சிலர் சுகமாகத் துரங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் பலவிதம். அவரவர் காரியம் அவரவருக்கு முக்கியம்.

கடல் பரப்பிலே ஒரு விம்மல். அது பெரிதாகி வீங்குகிறது. கனக்கிறது. தடித்துப் பெருக்கிறது. வளர்கிறது. உயர்கிறது. உருண்டு வருகிறது. விம்மி எழுகிறது. உட்கவிகிறது. தலை தணிகிறது. அப்போது கண்ணாடி மாதிரி மிளிர்கிறது. கவிந்த உட்பரப்பின் தலைமீது வெண்மை அரும்புகிறது. அப்பகுதி கனமேறித் தடாலென விழுகிறது. அலைச்சிதறல் குதிரைபோல் ஒடி வேகத்தோடு பாய்ந்து வந்து அலைநுரைப் பரப்பாய்ப் பாவாடை விரிவாய்ச் சரசரத்து நிலம் தடவி மாய்கிறது. பாவாடை விளிம்பின் பூ வேலைப்பாடுகள் போல் நீர்ப்பரப்பு சுழன்று அழிந்து மறைந்தே போகிறது. அலையின் தோற்றமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மறைவும் கண்டு களிப்பதற்கு இனிமையான அற்புதக் காட்சி அலை மேல் அலையாய்த் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அலையின் சிதறல் அரும்புகளின் குவியலா? மலர்களின் பரவலா? துருவித் துருவிச் சிதறப்படும் தேங்காய்த் துரவல்களா? சிதறி எரியப்பட்ட கண்ணாடியின் உடைந்த நுண்சில்லுகளா? சோப்பு துரைக்குமிழ்களா? பூ நூல்களின் பின்னல் வேலைப்பாடா? கடல் ஏன் சதா அலைந்துகொண்டே இருக்கிறது? அமைதி காண முடியாமலா? கவலையின்றித் துருதுருக்கும் சிறுபிள்ளைத்தன விளையாட்டாகவா?

கடலைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் மனிதர்கள்