பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வல்லிக்கண்ணன் அலுப்படைவதே இல்லை. பெரிய பெண்கள்கூட அலைகளோடு விளையாடுவதில் சிறுமிகள் ஆகிவிடுகிறார்கள். கடலின் முன்னி லையில் காதலர்கள் தனிமகிழ்ச்சி அடைகிறார்கள். காமுகர்கள் புதுஇன்பம் பெறுகிறார்கள். கடல் வலிய உயிரூக்கி உணர்வூக்கி.

கடல் பயங்கரமானது. பயங்கரப்பிராணிகள் வசிக்கும் இருள் ஆழப்பெருவெளி. ஆளை அமுக்கிக் கொல்லும் நீர்ச்செறிவு கவனக் குறைவோடு கரையோரம் இறங்குவோரைக் கீழே தள்ளி உருட்டிப் புரட்டி உள்ளிழுத்துச் சுழற்றிப் பந்தாடும் அலைகள் மேயும் அகல் அரங்கம். மனிதன் காலைக் கவ்வி உள்ளே இழுத்துச் செல்லக் கூடிய சுறாமீன்கள் எப்போதாவது கரை ஓரம் வருகின்றன. மனிதரைக் கொல்லும் பெரிய மீன்களைக் கொல்கிற வாய்ப்பு மனிதருக்குச் சிலசமயம் கிடைத்து விடுகிறது.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மீனை வேடிக்கை பார்க்க மனிதர்கள் கூட்டம்கூட்டமாய், கடலோரம் வருகிறார்கள். சமயத்தைப் பயன்படுத்தி அதையும் காசு சேர்க்கும் வழி ஆக்கி விடுகிறார்கள் சிலர்.

கடல்மீது கப்பல் மிதப்பது ஒரு அதிசயம். விஞ்ஞான வெற்றி, அலைகள் சாடும் நீர்ப்பரப்பின்மேல் வெகுதூரம் வரை பாதுகாப்பு இல்லாத கட்டுமரத்தில் மூன்று பேர் நான்கு பேராகப் பயணம் செய்து மீன் பிடித்து மீண்டுவருவது மனிதரின் துணி வையும், பிழைப்புக்காக எவ்வித அபாயங்களையும் மேற்கொள்ளச் சித்தமாகிவிடுகிற இயல்பையும் காட்டுகிறது. -

அபூர்வமாகச் சில சமயங்களில் ஒரு கப்பல் அல்லது மூன்று நான்கு கப்பல்கள்- ஏழெட்டுகட - அசையாது கடல் மீது நிற்பது காட்சியாகிறது. இரவானதும் வரிசையாய், தோரணமாய், அழகு செய்யப்பட்ட மின்சார விளக்குகள் ஒளிபெற்றுச் சிரிக்கின்றன. வெகு அற்புதம். பார்வைக்கு விருந்து. இதுவும் மனித உழைப்பின், விஞ்ஞானத்தின் விந்தை மலர்ச்சியே ஆகும்.

கடலை ஒட்டிய மணல்வெளி ஆள் யாருமற்ற வெம்பரப் பாய்க் கிடக்கிறது. சில நேரம். உழைப்பவர் தென்படும் தொழில் நிலமாய்த் தெரிகிறது. அவ்வப்போது பொழுதுபோகாதவர் வேலை இல்லாதவர், வீணர்கள், சோம்பேறிகள் ஒய்வுநாடுவோர் காதல் ஜோடிகள் நகரும்; அமரும்; பேசிப் பொழுதுபோக்கும் களமாக மாறுகிறது. பல்வேறு விளையாட்டுகள் ஆடுவோர் கூடும் மைதானம் போலாகி விடுகிறது. அடிக்கடிப் பெரும் கும்பல் திரண்டிடும் அரங்கம் ஆகிறது.

கோடை நாட்களில் மாலை வேளைகளில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், பொதுக்கூட்டங்கள் நிகழும் நாட்களில்,