பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வல்லிக்கண்ணன்

காற்றுள்ளபோதே துற்றிக்கொள்ளும் நோக்கமுடைய பேனா ஒட்டிகள், புகழ் உள்ள போதே பணம் பண்ணிவிட வேண்டியது மிக முக்கியம் என்ற எண்ணத்தோடு வேகம் வேகமாகத் தொடர் கதைகளை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள்.

கதை சுவாரஸ்யம், விறுவிறுப்பு சம்பவத்துக்குமேல் சம்பவம், மர்மங்கள், கொலைகள், துப்பறிதல், காதல் என்ற பெயரில் காம விளையாட்டு விவரிப்புகள், பெண் அழகு வர்ணிப்புகள், அடுத்து என்ன நிகழுமோ என்று ஆவலைத் துண்டும் விதத்தில் ஸஸ்பென்ஸ் வைத்து எழுதுவது - இவை போன்ற உத்திகள் அவசியம் தொடர்கதைகளில் கையாளப்பட வேண்டும்.

இப்படி எழுதுகிற எழுத்தாளர்களின் தயாரிப்புகளுக்கே மவுசு உண்டு. இவ்விதம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கதைகள் அமைவதற்கும் மேலைநாட்டுத் தயாரிப்புகளைத் தாராள மாகத் தழுவலாம். புதுமைப்பித்தன் சொன்னது போல தழுவுகிற கைகள் வலிமை பொருந்தியதாக இருக்கவேண்டும். யார் யாரை எப்படி எப்போது தழுவுகிறார்கள் என்பது வாசகர்களுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். அதுதான் முக்கியம்.

பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதனால் நஷ்டமில்லை. அநேக சமயங்களில் தழுவப்பட வேண்டிய சரக்கு களைப் பத்திரிகையாளர்களே தேர்ந்தெடுத்து, தழுவல் எப்படி இருக்கவேண்டும் என்று அவர்களே எழுத்தாளர்களுக்கு ஆலோச னையும் வழங்குகிறார்கள். எல்லாம் வியாபார வெற்றிக்காகத்தான், தொடர்கதைகள் மூலம் வாசகர்களின் ஆர்வத்தைக் கிளறி விட்டு, பத்திரிகை படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என்று செய்து காட்டிய பெருமை தமிழ் நாட்டில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திக்கே உரியது. -

1930களின் பிற்பகுதியில் கல்கி தொடர்கதை எழுத ஆரம்பித்தார். அவருடைய முதல் தொடர்கதையான கள்வனின் காதலியே அபார வெற்றியாக அமைந்துவிட்டது. அடுத்த சமூக நாவலான தியாகபூமி சினிமா ஸ்டில் படங்களின் அதிகப்படி யான கவர்ச்சியோடு ஜாம் ஜாம் என்று பவனி வந்தது. பின்னர் அவர் சரித்திர நாவல் என்கிற பம்மாத்துப் படைப்புகளை ஆரம்பித்து வெற்றி கண்டார். வாசகர் கூட்டம் சொக்கிக் கிடந்தது. இன்று நான்தான் சரித்திரக்கதை சக்கிரவர்த்தி என்றும், நானே சரித்திர நாவல் கொம்பன் எனவும், நானே தான் கொம் பாதி கொம்பன் என்றும் யார் யாரோ கொக்கரித்த போதிலும், சரித்திர நாவல்கள் எழுதுவதில் கல்கி பக்கத்திலே யாரும் வர முடிப்ாது என்று உரத்துச் சொல்கிற ரசிகர்கள் இப்பவும் இருக்கிறார்கள்.