பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு காதல் கதை! 101

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், தூக்கமோ விழிப்போ அல்லாத 'இரண்டுங் கெட்டான்' நிலையிலே இறங்கியிருந்த நான். 'இப்படி ஒரு பொம்மை நம்மிடம் இருப்பது தப்பு. முதல் வேலையாக இதை எங்காவது ஒரு பாழுங் கிணற்றிலே போட்டு விட்டு வர வேண்டும் என்று என் மனம் தீர்மானம் செய்தது.

(பரிதி, 1985)


பேபி


'தட்டுங்கள், திறக்கப்படும்' என்கிற வாக்கு பேராசிரியர் வீட்டில் செலாவணி ஆகாது போலும்! நானும் எத்தனையோ தடவைகள் தட்டிவிட்டேன். இன்னும் கதவு திறக்கப்பட வில்லையே? யாரது, ஏன் என்று கேட்பாருமில்லையே!'

பேராசிரியர் பரமசிவம் அவர்களின் வீட்டுக்கதவை தட்டி அலுத்துவிட்ட கைலாசத்தின் மனம் இப்படி முணுமுணுத்தது.

'இதற்காகத்தான் நான் பெரிய மனிதர் எவரையுமே பார்க்கப் போவது கிடையாது. பெரிய மனிதர்கள் வீட்டில் அடையா நெடுங்கதவும், அஞ்சல் அஞ்சல் எனும் கரமுமா காத்திருக்கும்? அடைத்த கதவைத் தட்டித் தட்டி நம் கைதான் நோகும். இல்லையென்றால் காவல்காரன் நிற்பான். மரியாதை இல்லாமல் முறைப்பான். அல்லது அவனுக்கு நெருங்கிய உறவான நாய் உறுமிக்கொண்டு கிடக்கும். வீடு தேடிச் செல்கிற நமக்குக் கால நஷ்டமும் கெளரவ நஷ்டமும்...'

இதே தன்மையில் அவன் உள்ளம் இன்னும் புலப்ப புராணம் தீட்டிக் கொண்டேயிருந்திருக்கும், பேராசிரியர் வீட்டுக் கதவு திறக்கப்படும் ஓசை எழாது இருந்தால்!

திறந்த கதவின் பின்னே நின்ற திருவுருவம் கைலாசத்தின் கோபம், கொதிப்பு குமைதல் அனைத்தையும் அவித்துவிடும் ஆற்றல் பெற்ற குளுமைக் காட்சியாகத் திகழ்ந்தது.

பதினேழு - பதினெட்டு வயசு அழகு உருவம், பளிச்செனப் பார்வையில் பதியும் பட்டுப் பாவாடையும் தாவணியுமாக நின்றது. ஒரு கையில் 'எவர்சில்வர்' தட்டு, அதில் அஞ்சாறு பஜ்ஜிகள் வலது கை பஜ்ஜியை எடுத்து, செவ்விய உதடுகள் வட்டமிட்டு எழிலுறுத்திய வாய்க்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தது. இயல்பாகவே சதைப் பிடிப்பால் மினுமினுத்த