பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் வெளுக்க..

.


சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார்.

ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது...? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ!

அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து

அந்த நினைப்பு 'அப்பாடா!' என்று ஒரு நிம்மதியை அவருள் கொண்டு சேர்த்தது உண்மைதான்.

கமலத்துக்குக் கல்யாணம்! எல்லாருக்கும் மகிழ்ச்சி அளித்த பெரிய விஷயம். கமலத்துக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தந்த நிகழ்ச்சி. -

எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் தன்னுள் விதைத்து, அன்றாடம் பசுமைக் கனவுகளை அறுவடை செய்துவந்த பெண் உள்ளம், காலஓட்டத்தில் கூம்பிக் குவிந்து ஏக்கப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும்படியான சூழ் நிலையே வளர்ந்தது. தனக்கும் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்று அவள் குமைய நேர்ந்தது.

'கமலத்துக்கு இன்னும் கல்யாணம் பண்ணாமல் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே! என்று வக்கணை கொழித்தார்கள் அக்கம் பக்கத்தினரும், உற்றார் உறவினரும்.

அவர்களுடைய, மற்றும் சமூக மனிதர்களுடைய சின்ன மனசை, 'சிறியதோர் கடுகு உள்ளத்தை, சுயநலத்தை,' பேராசையை, வியாபாரப் போக்கை சிவசிதம்பரம் சந்திக்க நேரிட்டது, கல்யாண முயற்சிகளின் போது, 'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். கல்யாண முயற்சியில் ஈடுபடுகிறபோது, 'மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்' லாப நோக்கம் கொண்டு வியாபாரிகளாக மாறி விடுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஓர் இடத்தில் பேசி, முடிவாகப் போகிற கட்டத்தில், மற்றொரு பெண்வீட்டுக்காரர் 'ஆயிரம் இரண்டாயிரம்' அதிகம் தருவதாக