பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 வல்லிக்கண்ணன் கதைகள்

இவ்வாறு சின்னஞ் சிறு வயசிலிருந்தே காந்திமதிக்குத் தன்னிடம் அதிக ஆசை உண்டு என்பதை எடுத்துக் காட்டும் இனிய நினைவுகளை அசை போட்டவாறே நீராடி விட்டுச் சந்திரன் மெதுவாக வீடு நோக்கிக் கிளம்பினான். காந்தி போய் எவ்வளவோ நேரமாகியிருந்தது.

ஆற்றோரத்து அழகிய ஊரிலிருந்து படிப்பதற்கென்று பக்கத்து நகரம் ஒன்றில் குடியேறிய குடும்பங்களில் சந்திரன் குடும்பமும் ஒன்று. அவன் தந்தை இறந்த பின்னரும் தாய் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக நகரிலேயே வசித்து வந்தாள். சந்திரனின் அண்ணன் சேதுராமன் காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, ஏதோ ஒரு உத்தியோகத் துக்குரிய படிப்பு படித்துக் கொண்டிருந்தான். சந்திரன் பத்தாவது பாஸ் செய்த பிறகு, வேலை தேடுகிறேன்' என்று ஊரைச் சுற்றி வந்தான். கிராமத்திலிருந்த வீட்டையும் நிலத்தையும் அவர்கள் மாமா மேற்பார்த்து வந்தார்.

ஆண்டுதோறும் விடுமுறைக் காலத்தில் பார்வதி அம்மாள், மகன் சந்திரனோடு கிராமத்துக்கு வந்து தங்கியிருப்பாள். சேதுராமன் நண்பர்களோடு வெளியூர்களுக்குச் சுற்றப் போய் விடுவான். அல்லது நகரத்திலேயே தங்கி விடுவான். ஆற்றங்கரை அருகே இருந்தாலும், அழகான ஊராக இருந்தாலும், 'பட்டிக்காட்டு ஊர்' அவனுக்குப் பிடிப்பதில்லை. 'அவன் ஒரு மாதிரி. முசுடு. சிடுசிடுத்த 'அண்ணாவி’ என்பதுதான் மாமாவின் கருத்து. -

மாமா சிதம்பரம் பிள்ளைக்குச் சின்ன மருமகன் மீதுதான் பிரியம் அதிகம். 'சின்ன மாப்பிள்ளைப் பிள்ளே!’ என்று அன்போடும் முக மலர்ச்சியோடும் அழைத்து ஏதாவது பேச்சுக் கொடுப்பார். 'தமது அருமை மகள் காந்திமதியைச் சந்திரனுக்குக் 'கட்டிக் கொடுத்து', அவனையும் ஊரோடு இருக்கும்படி செய்துவிடலாம். நிலத்தைப் பார்த்துக் கொள்ளுவதோடு, கர்ணம் வேலைக்குப் படித்துக் கணக்குப் பிள்ளையாக உத்தியோகம் பெற்று விட்டால், காந்திமதியின் குடும்ப வாழ்க்கை உல்லாசமானதாக விளங்கும். இவ்விதம் அவர் திட்டம் வகுத்திருந்தார். அது அவர் மனைவிக்கும் பிடித்திருந்தது. காந்திமதிக்குக் கசந்தா கிடக்கும்? .

காந்திமதி 'பெரிய மனுவி' ஆனவுடன், சிதம்பரம் பிள்ளை பார்வதி அம்மாளிடம் தமது கருத்தை அறிவித்தார். அவளுக்கும் திருப்திதான். 'உங்கள் வார்த்தைக்கு நான் என்றைக்காவது மறுவார்த்தை பேசியது உண்டா, அண்ணாச்சி? நீங்க வந்து