பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 வல்லிக்கண்ணன் கதைகள்

டிருப்பது என்ற எனக்குப் படுகிறது. வாழ்க்கையின் பொறுப்புகளையும் சுமைகளையும் சோதனைகளையும் ஏற்று, சகித்து, போராடி, அனுபவித்து, அவற்றின் இன்ப துன்பங்களை இயல்பாக ரசிக்க மனமோ, பக்குவமோ இல்லாத - அல்லது சோம்பலோ, பயமோ கொண்ட - பலவீனர்களின் பற்றுக்கோல்தான் இப்படிப் புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருப்பது. இதுவும் ஒருவகை எஸ்கேப்பிசம்தான்' என்று அழுத்தமாகச் சொன்னார் பெரியவர்.

"இருக்கட்டுமே! இது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்படி ஆராயப்போனால், ஆத்ம உயர்வுக்கு என்றும், ஞானத்தைத் தேடி என்றும் தனி இடங்களையும் வனங்களையும் மலைகளையும் தேடிச்சென்ற பழங்கால முனிவர்களும், தவம் மேற்கொண்ட ஞானிகளும்கூட எஸ்கேபிஸ்ட்கள்தான். நானாவது ஜனங்கள் மத்தியிலேயே வசிக்கிறேனே!” என்றேன்.

அடுத்த வருஷம்தான் அவர் கேட்டார், "நீங்கள் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?" என்று/

"எனக்குப் பிடிக்காத காரியங்களில் நான் அக்கறை காட்டுவதில்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களில் கல்யாணமும் ஒன்று...”

"ஒரு பெண் உங்களை விரும்புகிறாள். அவளைச் சேர்ந்தவர்களும் மறுக்கவில்லை. வசதியாக வாழ்க்கை நடத்துவதற்கும் வழிகள் செய்ய முடியும். இந்த நிலையில் நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டு, அவர் என் முகத்தையே பாாததாா. -

"எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி நான் எண்ணுவதுமில்லை; பேச விரும்புவது மில்லை.”

அவர் பெருமூச்செறிந்தார்.

"மனிதர்கள் புத்தகங்களைவிட சுவாரஸ்யமானவர்கள் என்று மறுபடியும் சொல்கிறேன். அதிலும், பெண்கள் மிகமிக இன்டரஸ்டிங் ஆனவர்கள். அவர்களை - பலரையோ ஒருத்தியையோ - படித்து அறிந்து ரசித்து மகிழ்வதற்கு சான்ஸ் கிடைப்பது அபூர்வமானது. அப்படிக் கிடைக்கிறபோதே படித்து ரசிக்க முற்படாமல் போனால், அது பெரும் நஷ்டம் தான்’ என்றார்.

"நன்றி!” என்று கூறி அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன்.

அதன் பிறகு அவர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.