பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்கொன்றை பூக்கும்போது.... 177

அந்த வருஷம், ராஜம் வளர்ந்திருந்தாள். உள்ளத்திலும் உணர்வுகளிலும் மாறுதல்கள் பெற்றிருந்தாள். நாணம், கூச்சம், சங்கோஜம் எல்லாம் அவளை வந்தடைந்திருந்தன. அவள் முன்புபோல் அறைக்குள் அடிக்கடி வரவில்லை. ஆனால், 'ஆயிரம் தடவைகள் அப்படியும் இப்படியும் அலைந்து தன்னை எக்ஸிபிஷன் ஆக்கிக் கொள்வதில் அவள் ஆர்வம் அதிகம் உடையவளாக இருந்தாள்.

"பழைய ராஜமாக இனி இவள் விளங்க முடியாது. அது நஷ்டம்தான்!” என்று என்மனம் வருத்தப்பட்டது.

அக்காள் சுந்தரியும் மாறித்தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் மாறித் தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் ஏக்கமும் குடிகொண்டிருந்தன. வாழ்க்கை ஒவ்வொருவரையும் என்னென்ன சோதனைகளுக்கெல்லாம் தான் ஆளாக்குகிறது!

நாலாம் வருஷம் பொன் கொன்றைகள் வழக்கம்போல் பூத்துக் குலுங்கின. ஆனால் பக்கத்து வீட்டில் யாருமே வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்று உணரவைக்கும் சேதிகள் முன்னதாகவே கிடைத்திருந்தன.

பதினாறு வயசு ராஜம் திடீரென்று செத்துப் போனாள். மரணம் விவஸ்தையின்றி உயிர்க்கேளாடு விளையாடுவது ஏன், எதற்காக நடை பெறுகிறது என்று யாருக்குப் புரிகிறது? சிறு பெண் செத்துப்போய்விட்டாள். என்னைப் பொறுத்தவரையில், எனக்குப் பிடித்திருந்த விளையாட்டுப்பெண் ராஜம் மறைந்து போய் இரண்டு வருஷங்களாகியிருந்தன. எனக்கு இது ஒரு நஷ்டமாகத் தோன்றவில்லை.

என் இதயத்தை உறுத்தியது இன்னொரு செய்தி - சுந்தரி பித்தி மாதிரி நடந்துகொள்கிறாள். தன்னினைவற்றுக் கிடக்கிறாள் சில சமயம், உணர்வுபெற்று எழுந்ததும், காரணமற்றுச் சிரிக்கிறாள், 'பொன்கொன்றை பூக்கும் பூக்கும்' என்கிறாள். 'பூத்ததுதான் வாடிப் போச்சே' என்கிறாள். 'நரம்புநோய்' என்கிறார் ஒரு டாக்டர். ‘ஹிஸ்டீரியா என்கிறார்கள். வாழ்வின் வெறுமையும் ஏக்கமும் சேர்ந்து, ஆசைகளும் கனவுகளும் தோல்வியுற்று விட்டதும், அவள் உணர்வுகளையும் உள்ளத்தையும் வெகுவாக பாதித்துள்ளன என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இருக்கலாம். எல்லாம் சரியாகவே இருக்கலாம்.

அவள் தாத்தா சொன்னாரே, அதுவும் சரிதான். அவளை மனசில் நினைத்துக்கொண்டுதான் அவர் சொன்னார்:

அவள் புத்தகத்தைவிட - கவிதை நூலைவிட சவாரஸ்யமானவள். அவளை உணர்ந்து புரிந்து கொள்வதற்கு உரிய