பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 வல்லிக்கண்ணன் கதைகள்

இன்ப ஒவியமாகத் திகழ்ந்தது. அதையே பெருமையுடன் நோக்கியிருந்த கணவனின் முகத்திலும் மலர்ச்சி படிந்தது.

இக் குடும்பச் சித்திரம் புன்னைவனத்தின் கவனத்தைக் கவராது போகுமா?

'எத்தனை வயசுப் பெண்ணாக இருந்தாலும், நாணம் பெண்மைக்கு விசேஷமான அழகு சேர்த்து விடுகிறது!’ என்று அவர் உள்ளம் ரசித்தது. நண்பரின் பெருமையையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த விதமான குடும்ப இனிமைகளை ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லறத்தின் சிறு சிறு மகிழ்வுச் சிதறல்களை, நயங்களை - எல்லாம் அனுவித்து ரசிக்க வாய்ப்பு இல்லாதபடி, தன்னுடைய வாழ்க்கையைத் தானே வறளடித்துக் கொண்டதை எண்ணித் தன் மீதே அவர் அனுதாபம் கொள்வது உண்டு. இப்பொழுது குழந்தைகளின் கலகலப்பும், வேடிக்கைப் பேச்சும், தம்பதிகளின் போக்கும் அவருக்கு அதே உணர்வுக் கிளர்ச்சிகளைத் தந்தன.

அருணாசலம் புன்னைவனத்திடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, தனது வாழ்க்கைச் சுமைகளையும் தொல்லைகளையும் பற்றிப் புலம்பித் தீர்த்தார். 'எங்கே போக முடியுது, எங்கே வர முடியுது என்கிறீங்க? இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வூர் கோயிலுக்குக் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டடேன் தெரியுமா? ரொம்ப வருவடிம் ஆயிட்டுது, இனியும் தள்ளிப் போடப்படாதுன்னு கடன் வாங்கிக் கொண்டு வந்தேன். வெளியூரு, புது இடம், கோயில் என்பதனாலே எல்லோரும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கிறாங்க ஊரிலே, வீட்டிலே, தினசரி, ஒரே சோக நாடகம்தான். எத்தனையோ பிரச்னைகள், குழப்பங்கள், கவலைகள்! மனுசனுக்கு அமைதி என்பதே இல்லை. சரியான துக்கம் கூடக்கிடையாது. சண்டை, எரிந்து விழுவது இதுகளுக்குக் குறைவே இராது. அடிக்கடி உங்களைத்தான் நான் நினைத்துக் கொள்வேன். என்னை மாதிரி வாழ்க்கைச் சுழலில் சிக்கிக்கொண்டு திணறுகிற மகாராஜன், சொக்கையா இவர்களும் உங்களை நினைத்து பொறாமைப் படுவாங்க. எனக்குக்கூட உங்கமேலே பொறாமை தான். உங்களுக்கு என்ன! கவலையில்லாத வாழ்வு, நினைத்தால் நினைத்த இடம் போவது, மனசுக்குப் பிடித்த ஊரில் முகாம், எவ்விதமான சுமையோ, கால் விலங்கோ, பொறுப்போ கிடையாது, உங்க மாதிரி நானும் தனி