பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19Ꮾ வல்லிக்கண்ணன் கதைகள்

'பேஷோ பேஷ்!' கைலாசத்தின் மனம் கெக்கொலி கொட்டிச் சிரிக்கிறது.

அவனுக்கு 'இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' அதனுடைய கோளாறுதான் விபரீதமான சித்தப் போக்கு. இப்படிச் சொன்னார்கள் சிலபேர்.

பையனுக்கு 'கம்பீர ஜன்னி'; அதுதான் மன உதறலும் எண்ண உதைப்பும் அவனைப்பாடாய்படுத்துகின்றன என்று ஒருவர் சொன்னார். -

அவனோ தன் எண்ணங்களும் தானுமாகி, அந்த லயிப்பில் இன்ப சுகம் கண்டு வந்தான். எண்ணங்களால் அவன் விளையாடினான். வஞ்சம் தீர்த்தான். காதல் புரிந்தான். வெற்றிகள் மேல் வெற்றி பெற்றான்.

அவன் பிறந்த ஊரில் அவனுடைய மாமா ஒருவர் இருந்தார். அவன் அம்மாவும் இருந்தாள். சிறிது நிலமும் இருந்தது. அப்போது அறுவடைக் காலம். பணம் புரளக்கூடிய சமயம், தனக்கு ஐம்பது ரூபாய் அனுப்பும்படி கைலாசம் அம்மாவுக்கு எழுதினான். பதில் மாமாவிடமிருந்து வந்தது. அவர் போதனைகள் வழங்கியிருந்தார். சம்பாதித்து அம்மாவுக்குப் பணம் அனுப்ப வேண்டிய வயதில் உள்ள பிள்ளை அம்மாவிடமிருந்து பணம் கேட்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கைலாசத்துக்கு மாமா மீது ஒரே கோபம். 'அவரே சாப்பிட்டு ஏப்பமிடப் பார்க்கிறார்’ என்று நினைத்தான். அவர் மட்டும் இப்போ எதிரே இருந்தால், மண்டையிலே ஓங்கி ஒரு அறை கொடுப்பேன். ஐயோ அம்மா என்று அலறிக்கிட்டு விழனும் அவரு என்று எண்ணினான்.

- இப்ப எனக்கு வறட்சி நிலை. படுவறட்சி. பணம் கேட்டால் போதனை பண்ணுகிறாரு பெரியவரு, கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடு; சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு. சாத்தானுக்கு உரியதை சாத்தானுக்கே கொடு! எனக்கு உரியதை எனக்குத் தருவதில் உனக்கென்ன தடை?

அவன் எண்ணங்கள் சூடேறி வெடித்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து கடிதம் வந்தது. மாமா ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டார்; மண்டையில் பலத்த அடி கட்டுப் போட்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் அவன் உள்ளம் கும்மாளியிட்டது.

'ஐயாப்பிள்ளை எண்ணினார். டகார்னு அங்கே பலித்து விட்டது. எண்ணங்கள் சிலசமயம் அப்படி அப்படியே