பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பீரஜன்னி 199

தீயையும் நெடிது கிடத்தப்பட்ட தன் உடலையும் எண்ணி மகிழும் அளவுக்கு அவன் மனம் பக்குவம் அடைந்திருக்கவில்லையே! அவனுக்கு வாழ்க்கை தானே எண்ணங்கள் - எண்ணம் பூராவும் வாழ்க்கையைப் பற்றியது தானே?

'இப்படி அதிர்ச்சி வைத்தியம் செய்யக்கூடிய ஆசாமி யாராவது ஆரம்பத்திலேயே அவன் வாழ்வில் குறுக்கிட்டிருக்க வேண்டும். பையனின் 'கம்பீர ஜன்னி' முற்றி வளர்ந்திருக்காது!’ என்று ஒருவர் சொன்னார்.

தங்க நாணயங்களைக் குலுக்கி வீசுவது போல் கலகலக்கும் தனது 'ட்ரேட் மார்க்' சிரிப்பைக் கொட்டவில்லை கைலாசம். பாவம்! அவன் ஆஸ்பத்திரியை நோக்கிப் போய்கொண்டிருந்தான்.

(தீபம் - ஆண்டுமலர், 1968)


சிவத்தப்புள்ளை


சிவத்தப் புள்ளையூர் -

அந்த ஊர்க்கு முன்பு இருந்த பெயர் மறைந்து போகும் படியாக, அந்த ஊர்காரர்களே மறந்து விடும்படி, இந்தப் பெயர் நிலைபெற்று அநேக வருடங்கள் ஆகிவிட்டன.

அந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ரஞ்சிதம் கதை முடிந்தும் சில வருடங்கள் ஓடி விட்டன.

சில விசித்திரமான பெயர்கள் எத்தனை காலமானாலும் மாறுவதில்லை. 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்தவள் ஓடை' என்ற பெயர் ஒரு சிற்றோடைக்கு நிலைத்து, கால காலமாக வழங்கி வருவது போல. என்றைக்கோ, எவளோ ஒருத்தி, ஒடும் நீரில் மிதந்து வந்த பலாப்பழத்தை எடுக்கும் ஆசையோடு, கைப்பிள்ளையைக் கரைமீது கிடத்தி விட்டு பழத்தைத்துரத்தி ஒட, - அவள் அதை எடுத்துத் திரும்பி வருவதற்குள் பிள்ளை உருண்டு ஒடையில் விழுந்து நீரோடு செல்ல - அவள் பழத்தைக் கரையில் வைத்து விட்டு பிள்ளையைப் பிடிக்க ஒட - பழமும் புரண்டு புரண்டு நீரில் அடிபட்டுச் செல்ல - முடிவில் பிள்ளையும்போய் பழமும்