பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜாலி அண்ணாச்சி 213

அப்படி மற்றவர்கள் ஏசுவது பற்றித் தெரிய வந்தாலும், அவர் கவலைப்படமாட்டார். 'ஆயிரம் திட்டுக்கு ஒரு ஆனைப் பலம். பிறரது ஏச்சுகள் அதிகரிக்க அதிகரிக்க ஐயாப்பிள்ளைக்கும் பலம் அதிகமாகும்' என்று சொல்லிச் சிரிப்பார்.

'என்ன ஐயா, பலரையும் இப்படி ஏமாற்றுவது நியாயம் தானா? உமக்கே நல்லாயிருக்குதா இந்தச் சேட்டையெல்லாம்? என்று யாராவது கேட்டால், பரமசிவம் இவ்வாறு பதில் சொல்வார் -

'நானா அவர்களை ஏமாறுங்கன்னு கெஞ்சுகிறேன்? அவங்க தான் நாங்க ஏமாறத் தயாராக இருக்கிறோம், எங்களை ஏமாத்துங்கன்னு காத்திருக்காங்க. ரொம்பப் பேருக சுபாவம் இதுவாக இருக்கு. அவங்க அவங்களுடைய இயல்புப்படி ஏமாறுகிறாங்க. நான் என் சுபாவத்தின் படி காரியங்களை செய்கிறேன். அவ்வளவுதான்!'

பரமசிவத்துக்க அப்போது கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அந்தச்சமயம் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. ஆயினும், அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து, தமாஷாக 'திருமண அழைப்பு இதழ்’ ஒன்றை முறைப்படி தயாரித்து, அச்சிட்டு, சிநேகிதர் உறவினர், தெரிந்தவர் அனைவருக்கும் அனுப்பி வைத்தார்கள்.

அந்த அழைப்பில் குறிப்பிட்டிருந்த நாளில் தந்திகளும் வாழ்த்துக் கடிதங்களும் நிறைய வந்து சேர்ந்தன. சிலபேர் வெளியூர்களிலிருந்து புறப்பட்டு கல்யாணத்துக்கு வந்து விட்டார்கள். சிலர் பரிசுகள் வாங்கி வந்திருந்தனர். அவர்கள் உண்மையை அறிந்ததும் அடைந்த ஏமாற்றத்தைக் கண்டு வம்பர்கள் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள்.

எதுவும் கேலிக்கும் கிண்டலுக்கும் அப்பாற்பட்ட விஷயமல்ல; ஜாலி பண்ணி மகிழ்ச்சி அடைவதற்காக எவரையும் ஏமாற்றலாம் என்பது பரமசிவத்தின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்திருந்தது.

'பரவசிவம் பிள்ளை காட்டிலே மழை பெய்யுது இப்போ! இதே நிலைமை என்றும் இருந்து விடாது. இப்ப அவர் சிரிக்கிறார். மற்றவர்களுக்கும் சிரிப்பதற்கு சமயம் வரத்தான் செய்யும்' என்று அவரை அறிந்தவர்கள் சொல்வத உண்டு.

அவ்விதமான ஒரு சந்தர்ப்பமும் வரத்தான் செய்தது...

பரமசிவம் திருமணம் விஷயத்தில் நிகழ்த்திய கேலிக்கூத்து முடிந்த சிலவருடங்களுக்கப் பிறகு, அவர் நிஜமாகவே