பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னவன் 223

சின்னவர்கள் விரைவிலேயே பெரியவர்களாவதற்கு வழி பிறந்தால் தான் விமோசனம் உண்டு.

முருகன் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. அழுகையை அடக்க விரும்பாமலும், வாத்தியார் நினைவில் பயந்தபடியும் அவன் வேகமாக ஓடலானான்.

(மகரந்தம், 1998)



சுயம்பு


காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது.

ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுயம்புவின் கண்களில் ஒரு மிரட்சி. அவன் முகத்தில் ஒரு கலவரம். அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு. 'அய்யோ!' என்று சிறு கூவல் எழுப்பியது அவன் வாய்.

காரணம்? வேகமாகப் பறந்து கொண்டிருந்த உல்லாசிகளை அவன் கண்கள் பார்த்த சமயத்திலேயே, அந்த நிஜக் காட்சியை அழித்தபடி வேறொரு தோற்றம் அவனுக்கு புலனாயிற்று. இதுவும் நிஜமாகவே நேரில் காண்பது போல்தான் அவனுக்குப் பளிச்சிட்டது.

எமன் வாகனம் போல நின்றது லாரி. அதனால் மோதப்பட்ட மோட்டார் பைக் விழுந்து கிடந்தது. மண்டையில் அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடக்கிறான் அந்த இளைஞன். அவனுடைய தோழியும் அருகிலேயே விழுந்து கிடக்கிறாள். சிறு கும்பல் கூடியிருந்தது. -

வேக வாகனத்தின் 'படபட" ஓசை காதில் விழுந்து கொண்டிருக்க, சுயம்பு அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து பார்த் தான். உல்லாச ஜோடி ஒய்யாரமாக போய் கொண்டிருந்தது.

நெடுமூச்சுயிர்த்தான் சுயம்பு. 'நல்ல வேளை!' என்றொரு எண்ணம் அசைந்து கொடுத்தது அவன் உள்ளத்தில். ஆனால், 'அய்யோ!' என்று அவன் வாய்விட்டு அலற நேர்ந்தது உடனேயே...