பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூக்கபிள்ளை வீட்டு விருந்து 21

கடலை - வசதி மிகுந்தவர்கள். 1 படி கடலை கூட -'ஊர் வழக்கம்’ ஆக உறவுக் காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அநேகமாக எல்லா வீட்டாரும் இம்மாதிரி 'ஊர் வழக்க'ங்களை தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள். ஒன்றிரண்டு பேர்தான்' நாங்கள் என்னத்தை திரும்பச் செய்யப் போகிறோம் எங்களுக்கு ஊர் வழக்கம் வேண்டாம்' என்று மறுத்து விடுவார்கள்.

மூக்கபிள்ளை ஒன்றிரு தடவைகள் மறுத்துப் பார்த்தார், 'வழக்கம்' கொண்டு வருகிற பெண்கள், சும்மா வாங்கித்தின்னு வையிங்க. ஊர் வழக்கத்தை விடுவானேன்? என்று கொண்டு வந்ததை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவர் மறுத்ததில்லை. சடங்கு வீடுகளிலிருந்து 'சர்க்கரைப் பொங்கல்' (பாச்சோறு) வரும். கோயில் திருவிழாக் காலங்களில் 'புளியோதரை' "பருப்புப்' பொங்கல் சர்க்கரை பொங்கல் சுண்டல் பிரசாதம் வரும். கல்யாண வீட்டுப் பணியாரங்கள் வரும்.

சும்மா சாப்பிட்டு வையிங்க' என்று பெண்கள் தாராளமாகக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

இதை எல்லாம் வாங்குறமே நாம ஊராருக்கும் உறவுகாரங்களுக்கும் திருப்பி செய்ய சந்தர்ப்பம் வரவா போகுது? என்று அவர்மனம் ஆதியில் குறுகுறுத்தது. 'இதுக்காகவே, வசை இருக்கப்படாதுன்னே, நான் விசேஷ வீடுகளில் சாப்பிடுகிறது இல்லை. நம்ம வீட்டிலே என்ன விசேஷம் வரப்போகுது. நாம ஊர் கூட்டி சாப்பாடு போடப்போறோம்' என்று அவர் எண்ணினார். -

ஆனாலும் போகப் போக அவருடைய மனமும் ஆட்சேபிக்கவில்லை. மூக்கபிள்ளையும் 'ஊர் வழக்க'ங்களை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தார்.

இப்போது அவருடைய மனசாட்சி உதைத்துக் கொண்டது. தொந்தரவு கொடுத்தது.

முந்திய தினம் ஒரு வழக்கம் வந்தது. வசதியான வீடு. 'மறுவீடு வீட்டுப் பலகாரம்' என்று நிறையவே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். இனிப்புகளும், காரங்களுமாய் வகை வகையான தின்பண்டங்கள். -

'எனக்கு வேண்டாம் இனிமே நான் ஊர் வழக்கத்தை வாங்கப் போறதில்லே' என்று அறிவித்தார் மூக்கபிள்ளை.