பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 வல்லிக்கண்ணன் கதைகள்

அறுபத்து நான்காவது பிறந்த நாள் அன்று. ஆனந்தர் மகிழ்ச்சியோடு காலை உலா போய்க் கொண்டிருந்தார். நடைமேடை மீது தான் போனார்.

ஆனாலும், வேகமாக வந்த லாரி ஒன்று தடம் தவறித் தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தின் மீது ஏறி, ஆனந்தரை தாக்கியது. அவரைக் கீழே தள்ளி நசுக்கி, ஒரு மரத்தின் மீது மோதிவிட்டு நின்றது.

உரியமுறைப்படி காரியங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனந்தரின் உடல் சிதைந்து சீர்குலைந்து போயிருந்தது. இவர் தான் பரிபூரண ஆனந்தர் என்று அடையாளம் கூடக் காண இயலாத விதத்தில் அவரது முகம் துவையலாகியிருந்தது. பாவம்!

(அரும்பு - 1989)



முளையும் - விளைவும்


'விளையும் பயர் முளையிலே தெரியும்' என்று சொல்லப்படுகிறது. பயிர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கலாம். மனித வாழ்க்கையில் இந்த விதி பொய்த்துப் போகும்...

போகும் என்ன போகும்! முழுக்க முழுக்கப் பொய்த்தே விட்டது. பொய்யாகிக் கொண்டே இருக்கிறது! சிந்தித்துச் சினந்து சீறியது ஞானப்பிரகாசம் அவர்களின் அறிவு.

அவருடைய அறிவுக்கு, அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவரது உள் ஒளிக்கு, பலத்த அடிபட்டிருந்தது, நிமிர்ந்து நிற்க வலு இல்லாமல் செய்கிற சரியான 'வர்ம அடி’! அதுதான் அவருடைய சிந்தனைக்கும் சினத்துக்கும் காரணமாகும்.

அவருக்கு எப்போதும் தனது உள்ஒளி மீதும், அறிவின் திறமைமேலும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதனால் எழும் ஒரு கர்வம்.

'யார் எப்படிப் பட்டடவன் என்பதை அவன் முகத்தைப் பார்த்தே சொல்லிப் போடுவேன். ஒருவன் குணத்தை கொஞ்சநாள் ஆராய்ந்துவிட்டால், அவன் வருங்காலத்திலே என்ன ஆவான், எப்படி இருப்பான் என்று திட்டமாய் சொல்வேன். நான் சொன்னால் சொன்னபடி நடக்கும். நூத்துக்கு