பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முளையும் - விளைவும் 237

நூறு கரெக்டாக அமையும்' என்று தன்னகங்காரத்தோடு பேசுவதில் அவருக்கு ரொம்ப திருப்தி.

அவருடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி. 'உம்ம குணவிசஷம் இப்படி, நீர் இப்படி இப்படி நடந்து கொண்டிருப்பீர். இனி இந்த மாதிரி நடப்பீர்' என்று ஓங்கி அறைவது ஞானப்பிரகாசப் பொழுது போக்குகளில் ஒன்று.

அவர் முகராசியும், அவர் பேசுகிற தோரணையும், அட்டகாசமாய் சிரிக்கிற தொனியும் அவருடைய பெரிய மனித தோற்றமும், ஆக எல்லாமும் கூடி, எதிரே கேட்டிருப்பவர்களை தலையாட்டி பொம்மைகளாகவும், பல் இளிச்சான் சாமிகளாகவும், மறுத்துரைக்கத் தெம்பு இல்லாத ஊமைக் கோட்டான்களாகவும் ஆக்கிவிடும்.

இந்த விதமான வெற்றிகள் பல பெற்று அவருடைய தன்னம்பிக்கையும் தற்பெருமையும் கொழுப்பேறி வளர்ந் திருந்தன.

அவருடைய நண்பர் கனகசபை பள்ளி ஆசிரியர். அவர் மாலை வேளைகளில் வீட்டில் வைத்து அநேக பிள்ளைகளுக்கு 'பிரைவேட்'டாகப் பாடம் கற்பிப்பது உண்டு. அப்போதும் சுமார் இருபது பிள்ளைகள் சேர்ந்து; அவர் வீடே ஒரு தனிப் பள்ளிக்கூடம் மாதிரித் தோன்றும்.

ஞானப்பிரகாசம் மாலை உலா போய்விட்டுத் திரும்புகிற வழியில், பொழுதுபோக்காக அந்த இடத்தில் கணிசமான நேரத்தைக் கழிப்பது வழக்கம். நண்பர் பாடம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பார். படிக்கிற பிள்ளைகளை கவனிப்பார். ஆசிரியரோடு பேசிக்கொண்டு இருப்பார்.

'வருவதை முன்கூட்டியே உரைப்பது' பற்றி ஒரு நாள் பேச்சுத் திரும்பியது. அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவராய் பேசினார் கனகசபை, அப்போது ஞானப்பிரகாசத்துக்கு சூடு பிடித்துவிட்டது, ஆவேசம் வந்தவர்போல் கத்தினார் -

'ஒய், நான் இன்னைக்கிச் சொல்லுதேன். இங்கே இருக்கிற பிள்ளைகள் இன்னும் பத்து வருஷங்களுக்குப் பிறகு எப்படி இருப்பாங்க, என்ன ஆவாங்கன்னு நான் சொல்லுதேன். சோசியம் இல்லே, இவங்க குணங்கள், போக்குகளை ஒரளவுக்கு நான் ஸ்டடி பண்ணியிருக்கேன். அதை வச்சும் அவங்க முகத்தைப் பார்த்தும் சொல்லுதேன். வேணுமின்னா. வரிசையாய் பெயர்களை எழுதி நான்சொல்வதையும் எழுதி வச்சுக்கிடுவோம். அப்புறம் பத்து வருஷம் - ஏன், ஒரு வியாழவட்டம், பன்னிரண்டு வருவடிமே போகட்டுமே - அதுக்குப் பிறகு, நாம அதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நான் சொன்னது