பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 வல்லிக்கண்ணன் கதைகள்

நிகழும் எத்தனை எத்தனையோ உணர்ச்சி நாடகங்களுக்கெல்லாம் அவன் சிலை போன்ற சாட்சியாக இருந்து வருகிறான். அவன் பின்புறத்தில் பேசப்படும் பலவிதமான பேச்சுக்களும் அவன் காதுகளில் விழாமல் இருக்குமா என்ன? உலக வாழ்க்கையில் ஈடு பட்டிருப்பினும் அதனுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தாமரை இலைத் தண்ணீர் போல் காலம் கழிக்க வேண்டும் என்கிற லட்சியத்தின் உயிர் உருவமாக விளங்கியவன் அவன்.

ஆயினும், அந்தப் பெண்ணைக் கண்டதிலிருந்து அவன் மனம் அமைதியை இழந்து விட்டது. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு சஞ்சலம்.

'டிரைவர்!’

அழைத்தாள்.

‘என்ன?’ என்று கேட்டு அவன் தலையைத் திருப்பினான்.

'கொஞ்சம் நிறுத்துங்க. இந்த இடத்திலேயே இறங்கிக் கொள்கிறேன்’ என்று அவள் அறிவித்தாள்.

அவள் இஷ்டம்! அவள் மூச்சாந்தியில் இறங்கினால் என்ன? ரஸ்தாவின் ஒரத்தில் நிற்க ஆசைப்பட்டால் அவனுக்கு என்ன?

கார் நின்றதும், மீட்டரைப் பார்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டு, அவள் கீழே இறங்கினாள்.

அவளை ஒருதரம் நன்றாகப் பார்த்து விட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, வண்டியைச் செலுத்தினான் சந்திரன்.

அவள் கண்களும் அவனை அளந்தன. இயல்பாக நோக்கும் சாதாரணப் பார்வைதான் அது.

நாள்தோறும் யார் யாரையோ எங்கெங்கோ இட்டுச் சென்று இறக்கி விட்டு விட்டு, வேகமாக நகரைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு டாக்சியை ஒட்டுகிற டிரைவர் என்றோ ஒருநாள் சிறிது நேரம் பிரயாணம் செய்த எவளோ ஒருத்தியை நினைவில் நிறுத்தி வைத்திருக்க இயலாதுதான்.

ஆனாலும், விதிவிலக்கு நிகழ்ச்சிகளும் இருக்க முடியும் தானே?

அந்தவித அசாதாரண நிலையை அடைந்திருந்தாள் அந்த யுவதி. சந்திரன் உள்ளத்தில் அவள் நிலையான இடம் பெற்று, நினைவில் அடிக்கடி அலைகள் எழுப்பி வந்தாள். அவளைத் தேடிக்கொண்டே இருந்தன அவன் கண்கள்.

சினிமா தியேட்டர்கள் முன்னாலும், பெரிய ரஸ்தாக்களின் கூடல்களிலும், நாகரிக ஒட்டல்களின் அருகிலும், அவளைப்