பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 வல்லிக்கண்ணன் கதைகள்

வருவதாகச் சொன்னவன் தனது காரை அடைவதற்குக் கால்மணி நேரம் தேவைப்பட்டது.

அதுவரை அவளும் அவளது தோழியும் வெளியேதான் காத்து நின்றார்கள். ரஸ்தாவைப் பார்த்தபடி, போகிறவர் வருகிறவர்களைப் பார்த்தபடி, வழியோடு போவோருக்கு விழிவிருந்து ஆகும்படி!

'அடாடா, வெளியேதான் நின்றீர்களா? வண்டிக்குள் உட்கார்ந்திருக்கக்கூடாது?’ என்று அவன் பரிவுடன் பேசினான்.

'அதனாலென்ன!” என்றாள் அவள்.

'எங்கே போகனும்?' என்று கேட்ட சந்திரன், தனது இடத்தில் அமர்ந்தபடி, பின் ஸிட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்ட பெண்களைப் பார்த்தான்.

அவள்தான் பதில் சொன்னாள். 'படம் பார்க்கப் போகலாமின்னு கிளம்பினோம்' என்று. ஒரு தியேட்டர் பெயரையும் சொன்னாள்.

சந்திரன் தனது தொழிலே கவனமாக இருந்தபோதிலும், இரண்டு பெண்களின் பேச்சையும் கிரகிக்கத் தவறவில்லை. அவர்கள் சினிமா பற்றி, சில நட்சத்திரங்களைப்பற்றி, ஏதேதோ நாடகங்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உள்ளத்தில் நினைவாய் நீந்திக்கொண்டிருந்த பெண்ணின் பெயர் இந்திரா என்றும், அவள் தோழி ராதா என்றும் பரஸ்பரம் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டதிலிருந்து அவனுக்குத் தெளிவாயிற்று.

இவ்வளவு அறிமுகத்தோடு இரண்டாவது சந்திப்பு முடிந்தது. அவர்கள் குறிப்பிட்ட தியேட்டர் முன்பு இருவரையும் இறக்கி விட்ட பிறகு, சந்திரன் டாக்சி வேறு சவாரியைத் தேடி ஒடியது.

பளிச்சென ஒளிவீசி மறையும் திடீர் வெளிச்சம்போல் ஒரு சமயம் அவள் அவன் பார்வையில் பட நேரிட்டது.

கடைவீதி ஒன்றின் வழியே அவனுடைய டாக்சி ஒடிக்கொண்டிருந்தது, யாரையோ ஏற்றியபடிதான்.

இரவு பரப்பிய இருட்டு வலையைக் குத்திக் கிழிக்கும் ஒளிக்கற்றைகளை வாரி வீசும் விளக்குகள் எங்கெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

கடைகளின் நடுவே ஒரு சிறு 'டீ ஷாப்'. குறுகிய இடத்தையும், அங்கு இருந்தவர்களையும் பளீரென எடுத்துக் காட்டும் படி பேரொளி சிந்தியவாறு தொங்கியது மிகவும் பிரகாசமான ஒற்றை விளக்கு. அதன் கீழே ஒளி வெள்ளத்தில் உவகை காணும்