பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 வல்லிக்கண்ணன் கதைகள்

அவரவர் நினைவாகவே இருந்தவர்களின் மெளனத்தை அவள் பேச்சுதான் கலைத்தது. 'நீங்கள் ஒரு டிக்கட் வாங்கிக் கொள்கிறீர்களா?' என்று இந்திரா கேட்டாள்.

'ஊம்ம்' என்றான் அவன்.

'ஐந்து ரூபாய் டிக்கட் தரட்டுமா?' அவள் அவசரம் அவனுக்கு சிரிப்பு தந்தது. 'ஊம் என்றால், உடனேதானா? இன்னும் இரண்டு நாள் போகட்டும், பார்க்கலாம்’ என்றான்.

'உங்களை எங்கே பார்ப்பது? இப்படி ரோடில் பார்த்தால் தானே உண்டு?'

அவன் உறுதியாக அறிவித்தான்: 'இப்போ என்னிடம் பணம் இல்லை. இன்று என்ன கிழமை? செல்வாயா? சரி. வெள்ளிக்கிழமை நிச்சயமாக வாங்கிக் கொள்கிறேன். இன்று பார்த்த டாக்சி ஸ்டாண்டில், இதே நேரத்துக்கே, என்னைப் பார்க்கலாம். அல்லது, சாயங்காலம் வேண்டுமானாலும் வரலாம்...'

அவளும் சரி என இசைந்தாள்.

ஒரு இடம் வந்ததும், 'நான் இங்கேயே இறங்கி விடுகிறேன். கொஞ்சம் நிறுத்துங்கள்’ என்று சொல்லி, நிறுத்தி, இறங்கிக் கொண்டாள்.

'வீடு வரை வேண்டாமா?’ என்று விசாரித்தான் சந்திரன். அவள் வீட்டைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆசையுடன்தான்.

'இங்கே ஒரு ஃபிரண்டைச் சந்திக்கணும்' என்று கூறிய இந்திரா, 'வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கட்டும். அவசியம் டிக்கட் வாங்கிக் கொள்ளணும்' என்றாள்.

அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசியது மிகவும் வசீகரமாக இருந்தது. அவளது கரிய விழிகளின் சுழற்சி - செவ்விய இதழ்களின் சுழிப்பு - ஆஹ், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே!

ஆனால், கடமையும் கால உணர்வும் இருவரையும் பிரித்தன. . . .

அதுமுதல் 'வெள்ளிக்கிழமை' சந்திரன் நினைவில் சிவப்பு எழுத்து நாளாய்ப்பளிச்சிடலாயிற்று. அன்று இந்திராவைச் சந்திக்கலாம். அவளை ஒட்டலுக்கு அழைத்துப் போக வேண்டும். முடிந்தால் சினிமாவுக்கும்போகலாம்!

அவன் மனம் ஆசைச் சிறகு விரித்து, கற்பனை வெளியிலே சுகமாக மிதந்தது. இந்திராவோடு எப்படி எப்படிப் பேச