பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 வல்லிக்கண்ணன் கதைகள்

டார்ச் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனார். அவர் பின்னாலேயே சிலர் போனார்கள்.

முன்சென்றவர் ஸ்விச்சைப் போடவும், வெடித்துச் சிதறியது வெளிச்சம். ஒளியில் குளித்துக் காட்சி தந்த மனிதர் மீது குவிந்தது அனைவர் பார்வையும்.

அவர் 'குறுகுறு' என்று உட்கார்ந்திருந்தார். அவர் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அடிபட்ட மிருகத்தின் மிரண்ட பார்வை போல பீதி நிறைந்த கண்களால் அவர் அங்கு வந்தவர்களைப் பார்த்தார்.

‘என்ன மாமா, நீங்கதான் அப்படி சத்தம் போட்டீங்களா?' 'என்ன அண்ணாச்சி, என்ன நடந்தது?'

'பூனை கீனை மேலே விழந்ததனாலே பதறி அடிச்சுக் கூப்பாடு போட்டிகளா?

ஒவ்வொருவர் ஒவ்வொன்று கேட்டனர். அவர்கள் பார்வைகள் அறை நெடுகிலும் துழாவின. ஒன்றுமில்லை. வித்தியாசமாக, விபரீதமாக, எதுவுமே தென்படவில்லை.

மாமா என்று குறிப்பிடப்பட்ட அந்த நபர் பேச்சற்றுப் போனவர் போல, மிரள மிரளப் பார்த்தவாறு உட்கார்நதிருந்தார்.

பலரும், என்னவென்று அறிந்து கொள்ளும் தவிப்பில் ஏதேதோ கேட்க, என்ன சொல்வது என்று விளங்காதவராய் அவர் இருந்தார்.

'ஏதாவது சொப்பனம் கண்டிகளா, மாமா?'

'ஊம்ம்' என்ற ஆமோதித்தார் அவர்.

மற்றவர்களின் அறியும் அவா தூண்டப் படவும், "என்ன கனா அண்ணாச்சி?..." "கழுத்தைப் புடிச்சு நெரிக்கிற மாதிரி இருந்துதா மாமா?..." "என்னமா சத்தம் போட்டீங்க! பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட கேட்டிருக்கும். அப்படி கத்தும்படி சொப்பனத்திலே என்ன வந்தது மாமா?" என்று பலப்பல கேள்விகள் பிறந்தன.

அவர்களுடைய தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காக அவர் ஏதாவது. சொல்லியே தீரவேண்டியிருந்தது. 'நான் எங்கோ போய்க்கிட்டிருக்கேன். திடீர்னு நாலஞ்சு பேரு வந்து என்னை புடிச்சுக் கிட்டு, அப்படியும் இப்படியும் இழுக்கிறாங்க. இவனைக் கயித்தைக் கட்டி மரத்திலே தொங்கவிடுவோம்கிறான் ஒருத்தன். நீண்ட கத்தியாலே சதக்குனு என் வயித்திலே குத்துறான் இன்னொருத்தன். ஒரு தடியன் என் குரல்வளையைப் பிடிச்சு அழுத்தி... சே, ரொம்ப மோசமான