பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் ஒருத்தியும் 53

"பாவம் பைத்தியக்காரன்!” என சிங்காரத்துக்காக இரங்கல் தெரிவித்தார்கள் ரோடு ஒரங்களில் நின்றவர்கள்.

('உங்கள் பாரதி,' 2000)


ஊரும் ஒருத்தியும்


திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.

'இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பய ஊரு. இதுவும் ஒரு ஊரா என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.

ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். நாகரிகம் பயின்றவள் என்ற நினைப்பு. -

அவள் கல்யாணமாகி வந்த ஊர் சின்ன கிராமம். கடை வீதி கிடையாது. ஒரே ஒரு கடைதான் இருந்தது. இஷ்டப்பட்டபோது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தின்ன ஆசைப்பட்டால், அதற்கு உதவும்படியாக ஒரு மிட்டாய் கடை உண்டா? ருசி ருசியா வடை, காப்பி என்று சாப்பிட ஒரு ஓட்டல் இருக்குதா? சினிமா தியேட்டர் இல்லை. இதுவும் ஒரு ஊரா? -

ரஞ்சிதம் எப்பவும், எல்லோரிடமும் இப்படி குறை கூறிக் கொண்டிருப்பாள்.

அவளுக்கு கணவன் வீட்டாரையும் பிடிக்கவில்லை. என்ன சனங்க நாகரிகம் தெரியாதவங்க! இவ்விதம் மனசில் சொல்லிக் கொள்வாள். -

கணவன் குப்புசாமியைக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை தான். பேரைப் பாருங்க! குப்புசாமியாம். அழகான பேரு எத்தனை இருக்கு. அதிலே ஒண்ணு இதுக்குக் கிடைக்காமல் போச்சுதே. ஆளும் அழகு வழியுது! ஒவ்வொருத்தர் என்னென்னமா இருக்காங்க! சினிமாவிலே வருகிற கதாநாயகனுக மாதிரி. அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது லெட்சணமா இருக்கப்படாது? என் தலையெழுத்து எனக்கென்று இப்படி வந்து வாச்சிருக்குதே என அவள் அலுத்துக் கொள்வாள்.

குப்புசாமி நன்றாக உழைக்கக் கூடியவன். பக்கத்துச் சிறு நகரிலிருந்த மில் ஒன்றில் வேலை பார்த்தான். காலையில் ஆறு