பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 வல்லிக்கண்னன் கதைகள்

அவிர் மேனி மங்கை' என்பது மாதவிக்குத் தான் பொருந்தும்; தங்கம் என்றால் தங்கமே தான் என்று அவன் மனம் பேசியது.

'உனக்கு மிட்டாய் பிடிக்குமா. மாதவி?’ எனப் பரிவுடன் விசாரித்தான் அவன்.

'ஓ பேஷாக!' என்று இழுத்தாள் அவள். ஒரு சொல்லை உச்சரித்தால் 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்பதை வீணான கவிப்பிதற்றல் என்று அடித்துப் பேசும் பாலகிருஷ்ணன் 'கவி வாக்கில் உண்மை இல்லாமல் இல்லை’ என உணர்ந்தான் இப்போது.

அவள் கண்களை ஒரு தினுசாக ஒடுக்கிக் கொண்டு, சிறுநகை பூத்து 'எனக்கு சாக்லட் தான் பிடிக்கும். மில்க் சாக்லட் இருந்தால் போதும். எனக்குச் சாப்பாடே வேண்டாம்' என்று அறிவித்த போது, பாலகிருஷ்ணன் இந்த உலகத்திலேயே இல்லை!

சினிமாக்காரர்கள் சில சமயங்களில் 'ட்ரீம் எpக்குவன்ஸ்’ என்று படம் பிடித்துக் காட்டுவார்களே காதலர்களின் கந்தர்வலோக சஞ்சாரம் பற்றி, அப்படிப்பட்ட ஒரு காட்சியில் - பலூன்கள் மிதக்க, புகைச் சுருள்கள் நெளிய, விசித்திரமான இலைகளும் கொடிகளும் துவள, விந்தைப் பூக்கள் சிரிக்க அற்புதமாகத் திகழும் ஒரு கனவு உலகத்தில் - மாதவியோடு அவனும் திரிவதாக மயங்கி விட்டான்.

அதன் பிறகு கேட்பானேன்? அடிக்கடி மாதவிக்கு 'மில்க் சாக்லட்' கிடைத்தது. அவள் நாவில் சாக்லட் இளக இளக, அவளது உள்ளமும் தன்பால் உருகி ஓடிவருகிறது என்றே பாலகிருஷ்ணன் நம்பினான். . -

இந்த விதமாக ரகுநாதனும். பால கிருஷ்ணனும், சிவப்பிரகாசமும், சொக்கலிங்கமும், மற்றும் ஒன்றிருவரும் எண்ணிக் கொண்டு. ஆகாசக் கோட்டை கட்டுகிற அல்நாஷர்களாக அலைவதைக் கண்டும் காணாதவர்போல் இருந்தார் பரமசிவம். 'இளிச்சவாய் சுப்பன்கள்! ஒரு நாள் சரியானபடி பாடம் படிக்கத்தான் போகிறார்கள்' என்று அவர் மனக் குறளி சிரிக்கும்.

அந்த நாள் வரத்தான் செய்தது.

அன்று இளிச்சவாய் சுப்பர்கள் மட்டுமே பாடம் கற்றுக் கொண்டார்கள் என்றில்லை. சிரித்துப் பேசிச் சிங்காரமாய் பொழுது போக்கிய 'திட சுப்பி'யும் ஒரு பாடம் கற்றுக் கொண்டாள்.

சில நாட்களில் மாலை வேளைகளில் ஆபீஸர் காரியலாயத்தில் அதிக நேரம் தங்கி விடுவது உண்டு. அவர் கிளம்பிச் சென்ற