வல்லிக்கண்ணன் 92 வெளியே ஓரிடத்தில் அதற்குக் குடம் உடைத்து, கொள்ளி வைத்து அதைத் தீயிட்டுப் பொசுக்கினால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. அதைச் செய்வதில் உற்சாகமாகப் பலரும் ஈடுபட்டார் கள். ' கொடும்பாவி கட்டி இழுப்பதனால் மழை பெய் அமோ பெய்யாதோ, தங்களுக்கு வேண்டாதவர்களை-தாங் கள் வெறுக்கிறவர்களை-வசை பாடவும் ஏசி ஒப்பாரி வைக் கவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது மக்களில் சிலரது வழக்கமாக வளர்ந்துள்ளது. அந்த ஊர்க்காரர்களும் அவ்வாறே செய்தார்கள். அவர் கள் “கொடும்பாவிகள்” எனக் கருதிய அநியாயக்காரர்கள் வீட்டின் முன்னே கொடும்பாவி உருவைக் கிடத்தி, ஏச வேண்டியதை எல்லாம் ஏசிப் பாடியும் ஒப்பாரியாகப் புலம்பி யும், மார் அடித்தும் தங்கள் மனப்புகைச்சலைத் தணித்துக் கொண்டார்கள். ஒரு படி அரிசிக்கு மூன்று ரூபாய், மூன்றே கால் ரூபாய் என்று விலை கூறி விற்ற சில பொம்பளைகள் வீடுகளின் முன்னே-கொள்ளை வட்டி கூறிப் பணம் கடன் கொடுத்து சுலபத்தில் பணக்காரர்கள் ஆகிவிட்ட சிலர் வீட்டின் முன்னால்-தன்னை நம்பிய சிலரை வஞ்சித்து அவர்கள் சொத் தைத் தம் சொத்தாக ஆக்கிக்கொண்ட ஒன்றிரண்டு பெரிய தனக்காரர்கள் வீட்டு முன்புறம் எல்லாம் இந்தத் தெருக் கூத்தை ரொம்பவும் உற்சாகத்தோடு ஆடிக் களித்தார்கள் அவர்கள். பால்வண்ணம் பிள்ளையும் அத்தகைய 'விசேஷ மரி யாதைக்கு'க்கு இலக்கானார். அவருடைய கஞ்சத்தனமும், இரக்கமற்ற தன்மையும், பிறருக்கு உதவ மனமில்லாத சுபாவமும், அநியாய வட்
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/102
தோற்றம்