பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வல்லிக்கண்ணன் கதைகள் டிக்குக் கடன் கொடுத்து பணம் திரட்டும் போக்கும், உறவுக் கார மைனர்ப் பையன் ஒருவன் தலையைத் தடவி தனது சொத்துக்களைப் பெருக்கிக் கொண்ட லீலையும் பிறவும் வசைபாடப்பட்டன. பலரும் மாரடித்து, ஒப்பாரி வைத்து சங்கு ஊதி ஆரவாரித்தார்கள். சிலர் காறித் துப்பினர். பழம் பானைகளை அவர் வீட்டுவாசலில் போட்டு உடைத் தார்கள். செங்கல் கட்டிகளை 'வெடலை'யாக வீசி, வாசலைப் பாழ் படுத்தினார்கள்.

  • சண்டாளப் பாவி, கொடும்பாவி! நீ இருக்கிற ஊரிலே மழை எப்படிப் பெய்யும்?' என்று கூவிவிட்டு நகர்ந்தார் கள்.

இத்தனை அமர்க்களமும் பால்வண்ணம் பிள்ளை கண் முன்னாலேயே நடைபெற்று முடிந்தது. அவர் என்ன செய்ய முடியும்? திண்ணையில் ஒய்வாகப் படுத்திருந்தார். திமுதிமுவென்று அநேகர் வாசலுக்கு வருவதைக் கண்டு எழுந்து உட்கார்ந்தார். அவர்கள் வந்தார்கள். ஆடித் தீர்த்தார்கள், இவ்வளவு அவமானப்படுத்தியது போதாதென்று படி அரிசி போடுங்க! கொடும்பாவி கொளுத்துறோம், பணம் கொடுங்க!' என்று அவரிடமே கேட்டார்கள். அவருக்கு លាប់ வழங்கவில்லை; கையும் ஓடவில்லை. செயலற்று, திக்பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார். 'அரிசிக்கும் பணத்துக்கும், போயும் போயும் நல்ல ஆளைப் பார்த்துக் கேட்டிரே! எச்சிற் கையால் காக்கா விரட் டாத கர்ண மகாபிரபு ஆச்சே இவரு. பிச்சைக்காரனைத் துரத்திலே கண்டாலே, ஏசி விரட்டுகிற புண்ணியவான் இல்லையா; இவரு' என்று ஒருவன் அடுக்கினான். -