பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 வல்லிக்கண்ணன் கதைகள் அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. மனைவி கொஞ்சம் பணம் கொண்டு வந்தாள். அதையும் வட்டிக்குக் கொடுத்தும் பெருக்குவதில் அவர் ஆர்வம் கொண்டார். பணம் சேரச் சேர, வீடு தோட்டம் வயல் என்று வாங் கிச் சேர்த்தார். பணத்தாசை வலியதாகி அவரை ஊக்கிக் கொண்டே இருந்தது. செலவு செய்ய அவருக்கு மனம் வராது. வீட்டில்கூட நல்ல சாப்பாடு, நல்ல துணிமணி, பண்டபாத்திரங்கள் என்று செலவிடத் துணிந்ததில்லை அவர். பணம்-பணத்துக்கு மேல் பணம்-சொத்து சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வெறியாக வளர்ந்து அவரைப் படாதபாடு படுத்தியது. அதனால் அவர் மனைவியைக் கொடுமைப்படுத்தினார். அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. அதுவும் நல்லதுக்கு என்று அவர் நினைத்தார். - அண்டை அயலாருக்கு அவர் உதவ விரும்பியதில்லை. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மொய் என்றும் அன்பளிப்பு' என்றும் செலவு செய்ய 6675 கொண்டதில்லை. ஊர்ப் பொதுக் காரியங்கள், கோவில் விழாக்கள் முதலியவைகளில் பங்கு பற்றிப் பணம் தர முன் வந்ததில்லை. ஏழை எளியவர், கஷ்டப்படுகிறவர், நெருக் கடி சமயம் உதவுங்கள் என்று வருகிறவர்கள் யாருக்குமே அவர் பண உதவி செய்ததில்லை. . LಣT Gfäಹ வேண்டும் என்ற ஒரே ஆசைதான் அவ ருக்கு இருந்தது. எப்படி எப்படியோ பணமும் சொத்தும் சேர்த்தார். மனைவி செத்தாள். கடையை அவர் லாபத்திற்கு விற் றார். விட்டோடு இருந்து வட்டிக்கு விட்டும் நிலத்தை