பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 96: எல்லாம் கட்டுக் குத்தகைக்கு விட்டும் பணம் சேர்த்துக் கொண்டுதான் இருந்தார். அதில் அவருக்கு தனி திருப்தி இருப்பதாகத்தான் தோன்றியது. அந்த அடிப்படையைக் கொடும்பாவி நிகழ்ச்சி தகர்த் தெறிந்தது. அவர் நிலை குலைந்து போனார். எதுக்காக வாழ்வது? ஏன் இப்படி பணம் சேர்க்க வேண் டும்? நான் யாருக்காக இவ்வளவு பணத்தையும். சேர்க் கிறேன்... இன்னும் சேர்க்க ஆசைப்படுகிறேன்? இவ்வாறு எண்ணப்புரி சுழன்று சுழன்று நெளிந்தது. அவருள். - . - எல்லோருடைய வெறுப்புக்கும் பாத்திரமாகி... நல்லவன் என்று சொல்வதற்கு ஒருவரும் இல்லை. தன் னிடம் அன்பு காட்டுவதற்கு, யாருமே இல்லை. இப்படி எண்ணி எண்ணிக் கசந்தது மனம். அங்கு புழுக்கம் ஏற்பட்டது. இக்கழிவிரக்கம் அவர் கண்களில் நீர் பொங்க வைத்தது. கண்ணிர் வடித்தபடி அவர் உட்கார்ந்திருந்தார். எவ் வளவு நேரம் போயிருக்கும் என்றே அவருக்குத் தெரியாது, என்ன செய்வது எனப் புரியாதவராய்-செய்வதற்கு எதுவுமே இல்லை என்றொரு வெறுமை உணர்வு கொண்டவராய்ஆந்த ஏலாத் தன்மையும் தனிமையுமே விரக்திச் சுமையாய், வேதனைப் பளுவாய் அழுத்த, அவர் உட்கார்ந்திருந்தார். ‘ என்ன அண்ணாச்சி இதெல்லாம்? ஏன் இப்படி குறு குறுன்னு உட்கார்ந்திட்டிக?' என்ற குரல் அவரை உலுக்கி வது.